அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
கத்தும் அலைகடல் ஓரத்திலே
அன்புத் தாங்கியே வந்தவளே
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா
1. வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ
2. நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ