பாத்திமா அன்னையின் தரிசனத்தின் நூற்றாண்டைச் சிறப்பிப்போம் ***


அம்மா நீ தந்த செபமாலை 

செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை 

அன்றாடம் ஓதி உயர்வடைவோம் 

மண்றாடும் நலன்கள் உடனடைவோம் .....

செபமாலை செபிப்போம் .....

பிரிவினை சாத்தான்களை 

செபமாலையைக் கொண்டு தூர ஓட்டுவோம்..........

அம்மா நீ தந்த ஜெபமாலை

ஜெபிக்கும் நாளெல்லாம் சுப வேளை - 2

அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்

மன்றாடும் நலன்கள் உடன் அடைந்தோம்  - 2

சந்தோச தேவ இரகசியத்தில்

தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் - 2

எம்தோசம் தீர இயேசுபிரான்

உம் அன்பு மகனானார்

அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும்

காணாமல் தேடிப் புலம்பியதும்

வீணாகவில்லை தாய் மரியே

உம் வாழ்வு எமக்கொரு மாதிரியே 

துயர் நிறை தேவ இரகசியத்தில் 

தூய நின் வியாகுலங்கள் கண்டோம்  - 2

உயர் வாழ்விழந்த எமக்காக

உம் மைந்தன் உயிர் தந்தார்

அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும்

வாட்டிய சிலுவைப் பாடுகளும்

சாய்த்திட்ட கோலம் பார்த்தாயம்மா

தாய் நெஞ்சம் நொறுங்கிய தாரறிவார்

மகிமையின் தேவ இரகசியத்தில் 

மாதா உன் மாண்பினைக் கண்டோமே - 2

சாகாமை கொண்ட நின் மகனார்

சாவினை வென்றெழுந்தார்

அவரே ஆவியால்

உம்மை நிரப்பியதும்

தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்

மூவுலகரசி ஆக்கியதும்

மாதா உன் அன்புக்குத் தரும் பரிசே

அம்மா நீ தந்த செபமாலை 

செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை - 

அன்றாடம் ஓதி உயர்வடைவோம் - 

மண்றாடும் நலன்கள் உடனடைவோம் .....

செபமாலை செபிப்போம் .....


பிரிவினை சாத்தான்களை செபமாலையைக் கொண்டு தூர ஓட்டுவோம்..........