இனிய உன் நாமம் ஓதிடல் தினமே
அனைவரும் மகிழ்வோமே
தாயினும் மேலாம் தாயுமே நீயே தமியோர் திரவியமே
அன்பிதே அன்பிதே மாதா தன்னலமே அற்ற மாதா
1. கலைமொழியால் உனைத் துதித்திட நாளும்
கவலைகள் நீங்குமம்மா
தேனிசைப் பாவால் தாயுன்னைப் பாட
தெவிட்டா உணவாமே
2. பஞ்சமும் நோயும் பகையும் தீர
பரிவுடன் பாருமம்மா
வளமோடு யாவும் நலமுடன் வாழ
வரமொன்று தாருமம்மா
3. பஞ்சமும் நோயும் பகையும் தீர
பார்த்திபன் இயேசுவையே
அஞ்சலி புரிவோம் அம்மா மரியே
அனவரதமும் துதிப்போம்