ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய்
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே
1. பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாய் உதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார்
2. வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
வாஞ்சையோடணைக்கும் தாரகையே
வாடிய மனிதர் கதியெனக் கொண்டோம்
3. அணிசேர் பெரும் சேனைபோல்
அலகைக்குப் பயங்கரமானவளே
தங்கும் துறை நீ தாபரம் நீ
தஞ்சம் விசுவசிப்போர்களுக்கென்றும்