"ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்: ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்: அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால்,
அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்: உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்: ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."
இசையாஸ் 58 : 13-14
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!