மெட்டு : பாட்டு பாடவா
பாட்டுப்பாடவா! போற்றிப்பேச வா !
வணக்கம் சொல்லவா வாழ்த்து கூற வா
மேன்மையோடு புவியில் உதித்த தாய்மையல்லவா !
யாம் பாதம் தேடி ஓடி வந்த மக்கள் அல்லவா !
1. தோரணங்கள் ஜொலிக்கும் வண்ண தேரினினுள்ளே
மரி அன்னையவள் அமர்ந்திருக்கும் அழகு காட்சியே
கண்ணிரைந்த காட்சிதனை சொல்ல வேண்டுமா !
அதை சொல்வதற்கு புவியில் உள்ள வார்த்தை போதுமா !
வரங்கள் வேண்டுமா ! நல்ல வளங்கள் வேண்டுமா !
என்றும் கொடுத்து கொடுத்து மகிழ்ந்திருக்கும் தாய்மையல்லவா !
2. நல்ல நல்ல எண்ணங்களை தாருமே அம்மா !
அதில் நல்ல நல்ல வாழ்க்கைகளே உள்ளதே அம்மா !
என்ணிறைந்த தீமைகளை நீக்கினால் அம்மா
நீ நெஞ்சிறைந்த ஆசிகளை கொடுப்பாய் அம்மா !
வாருமே அம்மா ! அருள் தாருமே அம்மா
உந்தன் பிள்ளைகளை எந்த நாளும் காப்பாய் அம்மா !