மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி
1. தேசுலவும் உன்னதமே தேவசிம் மாசனமே
பாருலவும் ஆனந்தமே பக்தர் பரவசமே
2. ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் இன்பமே
தீதறவே பாலித்தருள் ஜீவ மதுகரமே
3. ஆதவனும் அம்புலியும் ஆறிரு மீன் இனமும்
ஜோதிமய சுந்தரியே தூய பனிமயமே