ஒரு நாள் அரசருக்கு பிறந்த நாள் வந்தது. பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் அரசருக்குப் பொன்னும், பொருளும் பரிசாகக் கொண்டு சென்றார்கள். வசதி படைத்தவர்கள் அரசருக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். ஆனால் அரசரை அரண்மனையில் காணவில்லை. காலை 10 மணி ஆகியும் அரசரைக் காணாததால் வந்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. அரசரை அரண்மனை முழுவதும் தேடியும் காணவில்லை. இறுதியாக அரசரை அரண்மனைக்கு வெளியே கண்டு கொண்டார்கள். அரசர் அங்கே தன்னைப் பார்க்க வந்த ஏழை எளியவர்களுக்கு பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். எல்லாரும் அரசரைத் தேடிக் கொண்டிருக்கும் போது அரசரோ சாதாரண மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கியது ஆச்சரியத்தைத் தந்தது.
நம் ஆண்டவரும் இந்த அரசைப் போன்றுதான் தன் மக்களைத் தேடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் இவர்களைத் தேடி வருகிறார்.
இன்றைய நற்செய்தியில் செக்கரியா கடவுள் தனக்கு, தன் வாழ்வில் செய்த நன்மைகளுக்காக கடவுளை “தம் மக்களைத் தேடிவந்து மீட்ட கடவுள் என்கிறார்.
திபா18:6 இல் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் “என் நெருக்கடியில் ஆண்டவரை மன்றாடினேன். அவர் என் குரலைக் கேட்டார்” என்று. ஆம் நம் கடவுள் நம்மைத் தேடிவருபவர். நம் துன்பங்களை இன்பமாக மாற்றுபவர்.
எனவே நம்மைத் தேடிவரும் கடவுளை நம் உள்ளங்களில் ஏற்போம்.