தங்கம் நிறைந்து மேனி பொங்கும்
இதயமதில் எங்கும் நிறைந்திலங்கும் நாயகியே
தாயே தயாபரியே நீ எம்மை ஆதரியே
1. பன்னிரு தாரகை முடிசூட
பவள உன் பாதம் பிறைமூட
வெண்ணிற பனிமய பீடமதில்
வந்தருள் தஸ்நேவிஸ் மாமரியே
2. குலமாதே குணவதியே
இனியவளே இறைமகனே
வான்புகழே வரம் அருள்வாய்
3. தாய்மரியே தயாபரியே
குணாகரியே மனோகரியே
இது தருணம் வருவாயே