இராஜ கன்னி மரியே
விண் இராஜனின் தாய் நீயே
எம் இராணியும் நீ மரியே
1. நாள்பல அகன்று சென்றோமே
தாள் பதம் மறந்து நின்றோமே
ஆட்கொள்ளும் அன்னை என வந்தோம்
எமக்காதர வளித்தருள் வாயே
2. அருள் ஒளி அகத்தினில் கொண்டோம்
பொருட்செல்வம் பெருகிடக் கண்டோம்
இருள் எம்மில் புகுந்து இன்று
வல்ல இறையன்பு இழந்ததும் பாராய்