தன்னைச் சிலுவையிலே தந்த இறைமகனே
அன்னை மரியாளை அளித்தார் தாய் என்று
தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம்
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம்
1. பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள்
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்
2. அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம்
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்
3. வங்கக் கடற்கரை யோரம் மந்திரநகரில் வாழும்
தங்கநிலாவின் ஒளியால்
தாரகை சூடும் தஸ்நேவிஸ் மாதா