பிரிவினை சபைகளை சேர்ந்தவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் ஒன்று கத்தோலிக்க திருச்சபை ஏன் குருக்களை திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை..
கத்தோலிக்க திருச்சபை ஒருபோதும் திருமணத்தை தடைசெய்யவில்லை. மேலும் சொல்வதானால் திருமணத்தின் கண்ணியத்தை கத்தோலிக்க திருச்சபை மிகவும் வலியுறுத்துகிறது.
(இரண்டாவது திருமணத்தை அங்கிகரிக்க கோரி அதை திருச்சபை மறுத்து, பின்னர் புதிய சபை உண்டாக்கி சென்ற சந்தர்ப்பம் உண்டு வரலாற்றில்😂)
அத்துடன் திருமணம் கத்தோலிக்க திருவருட்சாதனங்களில் ஒன்று. ஏனென்றால் திருமணம் என்னும் திருவருட்சாதனமானது, இயேசுவின் உடலாகிய திருச்சபையோடு ஒன்றிப்பதை குறிக்கிறது. (எபேசியர் 5:21-33)
அதேபோலவே குருத்துவத்தை தெரிவு செய்து ஏற்பவரும், கிறிஸ்துவோடான திருமண உடன்படிக்கையில் நுழைகிறார்.
குருத்துவம் மற்றும் திருமணம் இவ் இரண்டு திருவருட்சாதனங்களும் சம நிலையில் பார்க்கப்படுபவை..
குருத்துவம் என்னும் திருவருட்சாதனத்தை தெரிவு செய்பவர்களுக்கு அதன் ஒழுக்கத்தை முறையாக பேணும் நோக்கில் அவர்கள் திருமணம் முடிக்க முடியாது என்ற ஒரு கட்டளையை திருச்சபை முன்வைக்கின்றது. அதாவது நீங்கள் குருவாக விரும்பினால் திருமணம் செய்ய முடியாது இதை ஏற்றால், தாராளமாக குருவாகுவதற்கான அழைப்புக்குள் வரலாம். உங்கள் தெரிவுக்கு விடுகிறது..
அதை விட்டு குருவாகுவதற்கு எந்த அடிப்படை தடைகளும் இல்லை என்று கூறிவிட்டு, குருவான பின்னர் மன்னிக்கவும் திருமணம் முடிக்க முடியாது என்று திருச்சபை கூறவில்லை.. வேறுபாட்டு புரிந்துகொள்ள வேண்டும்..
*குறித்து வைத்துக்கொள்ளுங்கள்:
யாரும் யாரையும் குருவாக வரவேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. மாறாக அவரவர் சுய விருப்பின் அடிப்படையில் குருவாக பணி வாழ்வை செய்ய விரும்புகின்றவர், இறையரசின் பொருட்டு திருமணம் மற்றும் உடலுறவை கைவிடுமாறு கேட்கப்படுகின்றனர். அதை ஏற்று விரும்பியே குருக்களாக தங்களை பணி வாழ்வுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
மீண்டும் கூறுகிறேன் யாரையும் கை காட்டி நீ கட்டாயம் திருமணம் செய்ய கூடாது, நீ குருவாக வரவேண்டும் என்று வற்புறுத்தி கூப்பிட்டு குருவாக திருநிலைப்படுத்துவதில்லை..
குருத்துவத்துக்கான அடிப்படை தகைமைகளை திருச்சபை வகுத்துத்துள்ளது. விரும்பினால் தெரிவு செய்யலாம். அல்லது திருமண திருவருட் சாதனத்துக்குள்ளும் போகலாம். அவரவர் விருப்பம்.
சரி இனி இறைவார்த்தை அடிப்படையிலான காரணங்களை பார்ப்போம்.
*இதை நினைவில் கொள்ளுங்கள்👉 விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றவர்களை இயேசுவும் புகழ்ந்து கூறுகிறார்.
(மத்தேயு நற்செய்தி 19:12c) அதே வேளை தலமைக்குருவாகிய இயேசுவும் திருமணமாகாதவரே..
(எபிரேயர் 4:14)
1 திமொத்தேயு 4:1-3
இந்த பகுதியில் புனித பவுல் கண்டனம் செய்வதானது, திருமணத்த முற்றுமுழுதாக தடை செய்பவர்களுக்கே பொருந்தும். ஏனென்றால் கடவுள் உருவாக்கிய இந்த திருமணம் என்னும் உறவை முழுமையாகவே, தீமையான ஒன்றாக காட்டும் தவறான ஆன்மிக நம்பிக்கைக்கு எதிராகவே பவுல் எச்சரிக்கிறார். அவ்வாறு பல குழுக்கள் அன்று இருந்தது..
(read with context)
ஆதி தந்தையரான ஜோன் கிறிஸ்தோசொம் (John Chrysostom) மற்றும் பல இறையியளாளர்கள், பவுல் யாரை எச்சரிக்கிறார் என்பதை குறித்த கருத்துக்களில் ஒத்துப்போகிறார்கள்.
அவ்வாறானவர்கள் யாரென்றால்
*Gnostics ஜினோஸ்-t-க்ஸ் (ஞானிகள்)
*Marcionites மர்சியோனிட்ஸ்
*Encratite என்கிறாரிட்
*Manicheans மனிக்கென்ஸ்
போன்ற குழுக்களே அவை.
இந்த குழுக்கள் திருமணம் மற்றும் இறைச்சியை உண்பது, (இன்னும் பல) போன்றவற்றை முழுமையாகவே தீமையான ஒன்றாக நம்பும் ஆன்மீகத்தை கொண்டிருந்தார்கள்.
பவுல் நிச்சயமாக திருமணமாகாத நிலையை தெரிவுசெய்தவர்களை குறித்து கண்டிக்கவில்லை. அவ்வாறு கண்டிக்கவும் முடியாது.. ஏனென்றால் புனித பவுலே இயேசுவைப் போலவே அதே திருமணமாகாத நிலையை பின்பற்றிய ஒருவர்.. (1 கொரிந்தியர் 7:8)
புனித பவுல் கூட கடவுளுக்கான பணிக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு செய்பவர்களை, திருமணம் செய்யாத நிலையில் அதை செய்வதை ஊக்குவிக்கிறார்..ஏனென்றால் அந்த நிலையில் முழுமையாக ஆண்டவருக்காக அர்ப்பணிக்க முடியும் என்பதை பவுல் பரிந்துரைக்கிறார்..
காண்க
நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், #மணமாகாதவர் #ஆண்டவருக்குரியவற்றில் #அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 7:32
(1 கொரிந்தியர் 7:32-35)
அதே வேளை பவுல் கட்டளையாக இதை கொடுக்கவில்லை.
மாறாக இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார். கத்தோலிக்க திருச்சபை கூட திருமணமாகாத நிலையில் ஆண்டவருக்கு பணிபுரிவதை #ஒழுக்கம் சார்ந்த ஒரு நிலையிலேயே (requirement of celibacy is a discipline) அழைக்கிறதே தவிர இது திருச்சபையின் கோட்பாடு அல்ல (not a doctrine). (முடிவை மாற்றவும் முடியும்)
அதனால்தான் சில சந்தர்ப்பங்களில் இந்த கொள்கையிலும், விட்டுக்கொடுப்புக்களை கொண்டுள்ளது.
உதாரணத்துக்கு: அங்கிலிக்கன் திருச்சபையை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகிய ஒரு குருவானவர், கத்தோலிக்க திருச்சபையில் இணையும்போது அதே திருமண நிலையில் கத்தோலிக்க குருவாகவும் நிருநிலைப் படுத்துப்படுகிறார். அவர் மணமாகிய நிலையில் அவர் குருத்துவ பணியை நிறைவேற்ற முடியும்.
அடுத்து கிழக்கு மரபு கத்தோலிக்க திரு அவையிலும் (எத்தியோப்பியன் கத்தோலிக்க திருஅவை தவிர்த்து) திருமணமாகிய குருக்கள் முறைமை உள்ளது.
ஆனால் அவர்கள் கூட ஒழுக்க அடிப்படையில் நற்கருணையை பலியை நிறைவேற்றும் முன்பதாக, உடல் உறவுத் தொடர்பை, குறித்த காலத்துக்கு முன்பதாக தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ப்படுவார்கள்..
இறுதியாக...
கடவுளுக்கான குருத்துவப் பணி என்பது கடவுளிடமிருந்து வரும் சிறப்பு கொடை ஆகும். திருமணமாக நிலையில் ஒரு குரு கடவுளுக்கான பணியில முழு ஈடுபாட்டோடு, தன்னை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணித்து இயேசுவிடமிருந்து பிரிக்கப்பட முடியாத இதயத்தோடு அவருக்கு பணி செய்ய திருமணமாகாத நிலையில் ஒருவரால் முழுமையாக ஈடுபட முடியும். மேலும் கடவுளுக்கும், தன் அயலவருக்கும் முழு சுதந்திரத்தோடு பணி செய்ய இந்த நிலை வழி செய்கிறது. புனித பவுல் கூட இதையே கூறுகிறார்.
திருச்சபையை பொறுத்தவரையில் திருமணமாகத துறவற நிலை ஒரு ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக கற்பித்து பின்பற்றுகிறதே தவிர கோட்பாடாக கொண்டிருக்கவில்லை. அதனால்தான் விதி விலக்கான சந்தர்பங்களும் உண்டு. அத்தோடு திருச்சபை இந்த ஒழுக்கம் சார்ந்த தன் நிலையில் முடிவு செய்து எப்போதும் மாற்றிக்கொள்ளவும் முடியும். ஆனாலும் இன்றுவரை திருச்சபை இதில் ஒரே நிலையில் உள்ளது..
திருமணமாகிய ஒருவர் தன் மனைவி பிள்ளைகளை ஆண்டவருக்குள்ளாக வழிநடத்தி, பொருளாதார தேவைகளையும் அவர்களுக்காக பூர்த்தி செய்ய வேண்டிய மிக பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் அதற்கே தன்னை முழுமையாக அர்பணிக்க வேண்டி உள்ளது. அது அவர்களுக்கு வைக்கப்படும் பொறுப்பும் கூட. ஆனால் திருமணம் முடிக்காத நிலையில் இந்த பொறுப்பு இல்லை. முழுமையாக தன்னை ஆண்டவரின் பணிக்காக ஒப்புக்கொடுத்து விடுகிறார் அவர். ஊர் விட்டு, நாடுகள் கடந்து பணி செய்கிறார்கள். ஆனால் இதில் திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்களின் நிலை வேறு. பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் இறை பணியையும் சரியாக செய்யாமல் இரண்டும் கெட்டான் நிலை. நீங்கள் உங்கள் பிள்ளைகளை, மனைவினை மகிழ்விக்கவும், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் நேரத்தை கொடுப்பீர்களா அல்லது கடவுளைக்கானவற்றை சிந்தித்துக்கொண்டே இருப்பீர்களா?
மீண்டும் கூறுகிறேன்..
குருத்துவமும்(துறவறம்) திருமணமும் இரண்டும் சம நிலையில் உள்ள திருவருட்சாதனங்கள்.
இதில் குருத்துவத்தை தெரிவு செய்பவர்களுக்கு திருமணம் முடிக்க முடியாது என்ற ஒரு கட்டுப்பாடு முன்னே உள்ளது. அதை தெரிவு செய்பவர்கள் இதை ஏற்றே செல்கிறார்கள்.. குருத்துவப்பணியில் தங்களை ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறார்கள். திருச்சபை ஒருவரை பார்த்து நீ இதைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அழைத்து, குருவாக திருநிலைப்படுத்துவதில்லை. விருப்பமிருந்தால் போகலாம். பணி செய்யலாம். அழைப்பு உள்ளவர்கள் செய்கிறார்கள். இது கடவுளின் கொடை. அழைப்ப..
அதே வேளை திருமணம் முடித்த நிலையிலும் மற்றவர்களுக்கு திருச்சபையில் பணி உள்ளது.. ஞானஸ்ஞானம் பெற்ற ஒவ்வொருவருக்கும் பணி உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்..
இனி குருக்கள் ஏன் திருமணம் செய்வதில்லை என்ற கேள்வி, பிரிவினை சபைகளாகிய உங்களுக்கு அவசியமில்லை.
குருவாக போனால் திருமணம் முடிக்க முடியாது என்று தெரிந்து, விரும்பியே ஒருவர் குருவாகிறார்.
சரி இப்போ கத்தோலிக்க கேள்வி நேரம்..
பிரிவினைகளை பார்த்து நீங்கள் கேளுங்கள்..
*பவுல் திருமணமாகாத நிலையில் கடவுளுக்கான ஊழியத்தை மிகவும் ஊக்குவிக்கிறார். இயேசுவும் திருமணம் செய்யவில்லை. உங்கள் தலமைப் போதகரே திருமணம் செய்யவில்லை, பவுலும் அதை ஊக்குவிக்கவில்லை என்னும் போது
நீங்கள் இந்த நிலையில் திருமணம் முடிக்காமல் ஏன் உங்கள் ஊழியத்தை வாழ்நாள் முழுமைக்கும் செய்வதில்லை?? எல்லா சுகபோகங்களையும் ஒதிக்கி உங்கள் ஊழியத்தை செய்ய போதிக்கலாமே. செய்வீர்களா???
செய்ய மாட்டீர்கள்.
மேலும் பிற இனத்தவர்களை தன் குருக்களாக நியமிப்பேன் என்று ஆண்டவர் எசாயா மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
காண்க
18 அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
21 மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
எசாயா 66:18,21
பிரிவினை சபைகளே எங்கே உங்கள் குருக்கள். ஆண்டவரின் இந்த தீர்க்கதரிசனம் ஏன் இன்னும் உங்களில் நிறைவேறவில்லை...
கத்தோலிக்கம் யூதத்தின் தொடர்ச்சி...கிறிஸ்தவ முழு நிறைவு..
ஆண்டவரின் குருக்கள் இங்கே உண்டு...
சிந்தியுங்கள்..எசாயா தீர்க்கதரிசனம் எங்கே நிறைவேறுகிறது என அறியுங்கள்..