இறைவன் செய்த ஏழு திருப்பணங்கள்! அதைச் செய்ய வைத்த மரியாள் ***

இறைவனுக்காகவும், மனிதருக்காகவும் வேறு எந்த யூதப் பெண்ணும் நடக்காத அதிகமான தூரத்தை இறைவனைச் சுமந்துகொண்டு நடந்தவர் மரியாள்.

இயேசு, மரியாளின் திருப்பயணங்கள்

01. மரியாளின் உறவினர் எலிசபெத் முதிர்ந்த வயதில் மகப்பேறு உண்டானதைக் கேள்விப்பட்டதும் நாசரேத்தூரில் இருந்து ஒலிவமலை, எருசலேம், எபிரோன் மலைநாடு இவற்றைக் கடந்து, 80 மைல் தூரத்திலிருந்த நான்கு நாடுகளைப் பயணித்து யூதேயா நாட்டிலுள்ள எலிசபெத்தின் ஊரான அயன்கரீமுக்குச் சென்று மூன்று மாதங்கள் அவரோடு தங்கிப் பணி செய்தது.

02. யூதேயாவிலிருந்து நாசரேத்தூருக்குத் திரும்பி வந்தது.

03. சூசை தாவீது குலத்தவராக இருந்ததால் மக்கள் தொகைக் கணக்குக் கொடுக்க கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றது. இது நடந்தது கி.மு. 7ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 18ஆம் நாள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

04. வானதூதர் அறிவித்தபடி ஏரோதின் சூழ்ச்சியிலிருந்து விடுபட குழந்தையைக் தூக்கிக்கொண்டு எகிப்திற்குப் போனது.

05. ஏரோது இறத்ததைக் கேட்டு எகிப்திலிருத்து திரும்பி வந்தது. இஸ்ரேல் நாட்டில் ஏரோதின் மகன் ஆட்சி செய்ததால் , அவனுக்குப் பயந்து மேலும் கனவில் எச்சரிக்கப்பட்ட கலிலேயா நாட்டிற்குச் சென்று நாசரேத்து என்னும் ஊரில் குடியமர்ந்தது. இது மிகச் சாதாரண யூத மக்கள் வாழ்ந்த சிறிய ஊர்.

06. இயேசுவுக்கு 12 வயது நடந்தபொழுது எருசலேமிற்குப் பயணமானது.

07. இயேசுவின் சிலுவைப் பாடுகளின் பாதையில் சிலுவைச் சாவுவரை தன் மகன் இயேசுவோடு பயணமானது .

நமது சிந்தனைக்கு :-
------------------------------------
   நம்முடைய காரியங்களுக்காக நாம் செய்வது பயணம். இறைவனது திட்டங்களுக்காக நாம் செய்வது திருப்பயணம். இயசுவை வயிற்றில் சுமந்துகொண்டு இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற மரியாள் இயேசுவோடு செய்த திருப்பயணம் ஏழு. திருப்பயணம் செய்தது மரியாளாக இருந்தாலும், தன் தாய்க்குப் பணிந்து இயேசுவும் தாயோடு சேர்ந்து பயணிக்கிறார். இறைவனுடைய திட்டத்திற்குப் பணிந்து நாம் வாழ்க்கையில் பயணிக்கிறோமா? என்று சற்று சிந்திப்போம்.