192. தன் இருதயத்தில் கடவுளைச் சுமந்திருப்பவன், தான் செல்லும் இடமெல்லாம் தன்னோடு பரலோகத்தைச் சுமந்து செல்கிறான்.
193. இவ்வுலகிலுள்ள எல்லாக் காரியங்களும் கடவுளின் கொடைகள், அவரை இன்னும் நன்றாக அறியவும், இன்னும் அதிக நிச்சயமான முறையில் அவரை நேசிக்கவும், அதிகப் பிரமாணிக்கத்தோடு அவருக்கு ஊழியம் செய்யவும் நமக்கு உதவும்படி, அவை நமக்காகவே படைக்கப்பட்டுள்ளன.
194. எல்லாமே உன்னைச் சார்ந்துள்ளன என்பது போல செயல்படு; எல்லாமே கடவுளைச் சார்ந்துள்ளதால், அவரில் உன் நம்பிக்கையை வை.
195. நாம் இவ்வாழ்வில் கடவுளை அறிந்து, நேசித்து, அவருக்கு ஊழியம் செய்யவும், என்றென்றும் அவரோடு மகிழ்ச்சியாயிருக்கவும் கடவுள் நம்மைப் படைத்தார்.
196. உலகத்தைச் சீரமைக்க விரும்புகிறாயா, உன்னையே சீர்படுத்திக்கொள், இல்லாவிடில் உன் முயற்சிகள் வீணானவையாயிருக்கும்.
197. நேசம் வார்த்தைகளை விட அதிகமாக செயல்களிலேயே காணப்பட வேண்டும்.
198. இடைவிடாமல் தன் மனதில் கடவுளை தியானித்துக் கொண்டும், கடவுளைத் தன் இருதயத்தில் சுமந்துகொண்டும் வாழ்பவன், மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
199. யாருக்குக் கீழ்ப்படிகிறோமோ அவரை நேசிக்கும்போது, கீழ்ப்படிவது கடினமாயிராது.
200. பிறருக்குக் கொடுக்கவும், அதற்கான விலையைக் கணக்கிடாதிருக்கவும் எங்களுக்குக் கற்பித்தருளும்.
201. நேசிப்பவர்களுக்கு, குறிப்பாக நம் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்துவின் மீதுள்ள நேசத்தின் நிமித்தம் நேசிப்பவர்களுக்கு, எதுவுமே மிகக் கடினமானதாக இருப்பதில்லை.
202. நீ பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போது, இயேசு அக்காலத்தில் உன்னை எவ்வளவு அதிகமான நேசித்தார் என்பதைப் புரிந்துகொள்கிறாய். நீ திவ்ய நற்கருணை அப்பத்தைக் காணும்போது, இயேசு இப்போது உன்னை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறாய் என்பதைப் புரிந்துகொள்கிறாய்.
203. திருச்சபையின் வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களில் புனிதர்கள் புதுப்பித்தலின் ஆதாரமாகவும், தொடக்கமாகவும் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.
204. ஆண்டவரே, தாராளமுள்ளவனாக இருக்க எனக்குக் கற்பித்தருளும்; உமக்குத் தகுதி யுள்ளபடி உமக்கு ஊழியம் செய்ய எனக்குக் கற்பித்தருளும்.