1. துன்பங்களும், சிலுவைகளும், தன்னுள் இனிய கனியைக் கொண்டிருக்கும் கடினமான மேலோடு ஆகும்.
2. அன்பு அனைத்தையும் நிறைவு செய்வதாலும், அது கடினமான காரியங்களை இலகுவானவையாகவும், கஷ்டமான காரியங்களை எளிதானவையாகவும் மாற்று வதாலும், நம் எல்லாச் செயல்களும் அன்பிலிருந்தே புறப்படச் செய்ய நாம் பாடுபடு வோமாக.
3. உண்மையான அன்பும், நிஜமான நம்பிக்கையுமே அணிசேர்ந்து செய்யும் எல்லா நல்ல வேலைகளுக்கும் அடிப்படையை உருவாக்குகின்றன.
4. துன்பத்தில் தமக்கு நன்றி செலுத்துபவர்களைக் கடவுள் நேசிக்கிறார்.
5. அனைத்திலும் அதிக முக்கியமான காரியமான தியானம் என்பது சிந்தனையல்ல, மாறாக, எல்லாவற்றிற்கும் மேலாக, நேசத்தில் கடவுளோடு கொள்ளும் ஐக்கியமாகும்.
6. நற்செய்தி அறிவிப்பதுதான் பிறர்சிநேகச் செயல்களில் எல்லாம் முதலாவதும், மேலானதுமான செயலாகும்.
7. வேதபோதகர் என்பவர் ஒளியல்ல, மாறாக, ஒளியாகிய கிறீஸ்துவை வெளிப்படுத்து பவரே.
8. பரிசுத்த ஆவியானவரின் வரப்பிரசாதத்தின் வல்லமையால் எதுவும் சாத்தியமே.