92. தாழ்ச்சியுணர்வு தேனை விட இனிமையானது, இந்தத் தேனைக் கொண்டு தங்களைப் போஷித்துக்கொள்பவர்கள் இனிய கனிகளைப் பிறப்பிக்கிறார்கள்.
93. மரியாயின் திருப்பெயர், இயேசுவின் திருப்பெயரைப் போல, இருதயத்திற்கு மகிழ்ச்சி யாகவும், வாய்க்குத் தேன் துளி போலவும், செவிக்கு இன்பமான இசையைப் போலவும் இருக்கிறது.
94. செயல்கள் வார்த்தைகளை விட உரக்கப் பேசுகின்றன, உங்கள் வார்த்தைகள் கற்பிக்கட்டும், உங்கள் செயல்கள் பேசட்டும்.
95. உலக செல்வங்கள் நாணலைப் போன்றவை.அதன் வேர் சேற்றில் புதைந்திருக்கிறது, அதன் வெளிப்புறம் பார்க்க அழகானது, ஆனால் உட்புறத்திலோ அது வெறுமையாக இருக்கிறது; ஒருவன் இப்படிப்பட்ட நாணலின் மீது சாய்வான் என்றால், அது முறிந்து அவனுடைய ஆன்மாவைத் துளைத்து விடும்.