179. நேற்றைய தினம் போய்விட்டது. நாளைய தினம் இன்னும் வரவில்லை. நமக்கு இன்று மட்டும்தான் உள்ளது. நாம் தொடங்குவோம்.
180. துன்பம் என்பது, அவர் உன்னை முத்தமிடும் அளவுக்கு நீ அவருக்கு நெருக்கமாக வந்திருக்கிறாய் என்பதன் அடையாளமாகும்.
181. அஞ்சாதே. நீ இயேசுவுக்கு விலையேறப் பெற்றவன். அவர் உன்னை நேசிக்கிறார்.
182. ஒருவனுக்குக் கனிவுள்ள அன்பையும், கரிசனத்தையும் காட்டு. உன்னுடைய ஒளிவீசும் அக்கறையும், உன்னுடைய ஒளிவீசும் மகிழ்ச்சியும் அந்த மனிதனுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கும்.
183. கடவுளில்தான் நாம் வாழ்கிறோம், இயங்குகிறோம், நம் இருத்தலைக் கொண்டிருக் கிறோம். அனைவருக்கும் வாழ்வளிப்பவர் கடவுளே.
184. உன் ஒன்றுமில்லாமை உன்னை அச்சுறுத்தும் ஒவ்வொரு முறையும் இயேசுவுக்கு ஒரு பெரிய புன்னகையைக் கொடு.
185. நம்மிடமிருந்தும், நம் விருப்பங்களிலிருந்தும், நம் சொந்த உரிமைகள், சலுகைகள், நோக்கங்களிலிருந்தும் நம் கண்களை நாம் அகற்றியதும், நம்மைச் சுற்றிலும் இயேசுவைக் காண ஏதுவாக அவை தெளிவடையும்.
186. சிறிய காரியங்கள் உண்மையாகவே சிறியவைதான், ஆனால் சிறு காரியங்களில் பிரமாணிக்கமாயிருப்பது ஒரு பெரிய காரியம்.
187. நாம் எந்த அளவுக்கு நம்மையே வெறுமையாக்கிக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு நம்மை நிரப்ப அதிகமான இடத்தை நாம் கடவுளுக்குத் தருகிறோம்.
188. நீ செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்பு. உன்னிடம் வரும் எந்த ஒரு மனிதனும் அதிக மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்லும்படி பார்த்துக் கொள்.
189. நீ பேசுவதற்கு முன், கேட்பது உனக்கு அவசியம், ஏனெனில் இருதயத்தின் அமைதியிலேயே கடவுள் பேசுகிறார்.
190. கடந்த காலம் உன்னைக் கலக்கம் கொள்ளச் செய்ய அனுமதியாதே -- இயேசுவின் திரு இருதயத்திடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு, மீண்டும் மகிழ்ச்சியோடு தொடங்கு.
191. மனிதன் எங்கே தவறி விட்டானோ, அங்கே, நாம் கடவுளிடம் மன்றாடினால், அவர் ஒரு வழியைத் தருவார்.