218. திவ்ய நற்கருணை வாதிக்கப்படும் ஆத்துமத்தை ஒளியிலும் அன்பிலும் குளிப்பாட்டுகிறது.
219. சிலுவையை நேசிப்பதில்தான் ஒருவன் தன் இருதயத்தைக் கண்டுபிடிக்கிறான், ஏனெனில் துன்பமின்றி தேவசிநேகம் பிழைத்திருப்பதில்லை.
220. அனைத்தையும் அர்ப்பணித்து விடுபவர்களுக்கு இயேசு அனைத்தையும் தருகிறார்.
221. நான் தொடர்ந்து எனக்கே மரிக்கவும், முறையிடாமல் துன்ப சோதனைகளை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
222. அவர் மீதான என் அன்பின் சாட்சியாக, மாமரி செய்ததைப் போல, நானும் துன்பப்படவும், தாராள மனதோடு எல்லாவற்றையும் அவருக்கு பலியாக்கவும் வேண்டும்.
223. என் ஆன்மாவின் ஒளியான இயேசுவே, துன்ப காலங்களில் எனக்கு ஞான வெளிச்சம் தந்தருளும்.
224. ஓ என் தாயாரே, இயேசுவை எனக்குத் தந்தருளும். என் இருதயத்தை எடுத்து, அதை என் இருதயத்தின் இருதயத்தோடு ஒன்றித்தருளும்.
225. நீ கடவுளை நல்ல முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும், அவருக்கு நேசமுள்ள வரவேற்புக் கொடுக்க வேண்டும், ஏனெனில் அப்போது அவர் நமக்கு வாடகை கொடுக்க வேண்டியவராக இருப்பார்!