138. மற்றொருவனைக் காயப்படுத்துவதன் மூலம் எந்த மனிதனும் தன்னையே குணப்படுத்திக் கொள்வதில்லை.
139. மரியாயின் திருப்பெயர் தேவ வரப்பிரசாதத்தின் நறுமணத்தை எங்கும் பரப்புகிற நறுமணத் தைலமாக இருக்கிறது.
140. பரிசுத்த தாழ்ச்சி அகங்காரத்தையும், உலகிலுள்ள எல்லா மனிதர்களையும், உலகத்திற்குச் சொந்தமான எல்லாப் பொருட்களையும் அழிக்கிறது.
141. எங்கே பிறர்சிநேகமும், ஞானமும் இருக்கிறதோ, அங்கே அச்சமும், அறியாமையும் இருப்பதில்லை.
142. இவ்வாழ்வின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகளின் மூலம் சாத்தான் மனிதனின் இருதயத்தை மந்தமாக்கவும், அங்கே தனக்கு ஒரு தங்குமிடத்தை அமைத்துக் கொள்ளவும் முயல்கிறான்.
143. எல்லாக் காலங்களிலும் நற்செய்தியை போதியுங்கள். தேவைப்பட்டால், வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.