35. புனிதர்கள் அனைவரும் நன்றாகத் தொடங்கியவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் அனைவருமே தொடங்கியதை நன்றாக முடித்தார்கள்.
36. கடவுளையும் உலகத்தையும் ஒரே சமயத்தில் பிரியப்படுத்த உன்னால் முடியாது. அவர்கள் தங்கள் சிந்தனைகளிலும், தங்கள் ஆசைகளிலும், தங்கள் செயல்பாடுகளிலும் ஒருவருக் கொருவர் முற்றிலும் எதிரானவர்கள்.
37. மண்ணுக்கு மழை எப்படியோ அப்படியே நம் ஆன்மாக்களுக்கு ஜெபமும். மண்ணுக்கு எவ்வளவுதான் செழிப்பாக உரமிட்டாலும், அடிக்கடி அது மழை பெறாத வரை, தரிசாகவே நிலைத்திருக்கும்.
38. குருத்துவம் இயேசுவின் திரு இருதயத்தின் நேசமாகும். நீ ஒரு குருவானவரைக் காணும் போதெல்லாம் நம் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்துவைப் பற்றி சிந்திப்பாயாக.
39. அநேக பரித்தியாகங்களும், அநேக போராட்டங்களும் இன்றி புனிதர்கள் புனிதர்களாக வில்லை.
40. பூசையை நிஜமாகவே நாம் புரிந்து கொள்வோமானால், மகிழ்ச்சியால் இறந்து போவோம்.
41. உலகத்திற்கும் அதன் இன்பங்களுக்கும் ஊழியம் செய்வதை விட, சிலுவையைப் பின்செல் வதில் நீ குறைவாகத்தான் துன்பப்பட வேண்டியிருக்கும் என்று நான் உனக்குச் சொல்கிறேன்.
42. நம் ஒன்றில் நம்மையே குற்றஞ்சாட்டிக்கொள்வோம், அல்லது நமக்கு நாமே சாக்குப் போக்கு சொல்லிக் கொள்வோம்.
43. எல்லோரையும் பிரியப்படுத்த முயற்சி செய்யாதே. கடவுளையும், சம்மனசுக்களை யும், புனிதர்களையும் பிரியப்படுத்த முயற்சி செய் -- இவர்களே உன் பொதுமக்களாக இருக்கிறார்கள்.
44. நீ உன் சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தைரியத்தோடு அதைச் சுமப்பாய் என்றால், அது உன்னைப் பரலோகத்திற்குச் சுமந்து செல்லும்.
45. நீ ஜெபிக்க வேண்டுமென்று கடவுள் உனக்குக் கட்டளையிடுகிறார், ஆனால் கவலைப்படுவதைத் தடை செய்கிறார்.
46. அனைத்தும் சிலுவையை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நாமும் கூட ஒரு சிலுவையின் வடிவத்தில்தான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.
47. ஆன்மா கடவுளின் மீது பசியாயிருக்கிறிது, கடவுளைத் தவிர வேறு எதுவும் அந்தப் பசியைத் தணிக்க முடியாது.
48. ஒவ்வொருவருடைய வாழ்வுக்குமான ஒரு விதி இதோ: உன்னால் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க முடியாத எதையும் செய்யாதே.
49. பரலோகத்தில் அவர்கள் (மாமரி) தேவ வரப்பிரசாதங்கள் மிக அதிகமாக யாருக்குத் தேவைப்படுகின்றனவோ, அந்த மனிதர்களுக்கு அவற்றைச் சோர்வின்றி பகிர்ந்தளிக் கிறவர்களாக இருக்கிறார்கள்.
50. தேவ வசீகரம் செய்யப்பட்ட ஒவ்வொரு திவ்ய அப்பமும், ஒரு மனித இருதயத்தில் நேசத்தைக் கொண்டு தன்னையே பற்றியயரியச் செய்யும்படி உண்டாக்கப்பட் டுள்ளது.
51. சோதிக்கப்படும்போது பக்தியோடு சிலுவை அடையாளம் வரைந்து கொள்பவன் நரகத்தை நடுங்கச் செய்கிறான், மோட்சத்தை அக்களிக்கச் செய்கிறான்.
52. தாழ்ச்சியுள்ளவனாக நிலைத்திரு, எளியவனாக நிலைத்திரு. எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறாயோ, அவ்வளவு அதிக நன்மைகளை நீ செய்வாய்.
53. மனிதர்கள் உலகத்திற்காகச் செய்வதைக் கடவுளுக்காகச் செய்வார்கள் என்றால், எவ்வளவு அதிக எண்ணிக்கையில் கிறீஸ்தவர்கள் மோட்சம் செல்வார்கள்!