ரூத்தாகமம் - அதிகாரம் 01

முகவுரை

இவ்வாகமம் மோவாப் தேசத்துப் பெண்ணாகிய ரூத் என்பவளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. இவள் மெய்மறையைத் தழுவி, போஸை மணந்து, மெஸியாவின் முன்னோர்களில் ஒருவராயிருக்கப் பாக்கியம் பெற்றாள்.

1-ம் அதிகாரம்

எலிமெலேக்கின் மரணம் - நோயேமி - ரூத்

1. நியாயாதிபதிகளுடைய காலத்தில் ஒரு நடுவனுடைய நாட்களிலே தேசத் தில் பஞ்சமுண்டானது கண்டு, யூதாவின் பெத்லேம் நகரத்து மனிதன் ஒருவன் தன் ஸ்திரீயோடும் இரண்டு குமாரரோடும் மோவாபித்த நாட்டிற்குத் தேசாந்திரியாய்ப் போனான்.

* 1-ம் வசனம்: “ஒரு நடுவனுடைய” -ஆயலோனுக்குப் பின்வந்த அப்தோன் என்பவன்.

2. எலிமெலேக்கென்பது அவன் பெயர். அவன் பெண்சாதி நோயோமி யெனப் பேர்பட்டவள். அவர்களுடைய இரு குமாரரில் ஒருவன் மஹலோன், மற்றொருவர் கேளியோன் எனப் பெயர் பூண்டவர்களாம். யூதாவிலுள்ள பெத் லேம் என்னும் எப்பிராத்தா ஊரில் இருந்து மோவாப் தேசத்திற்குப் போய் அங்கே சஞ்சரித்திருந்தார்கள்.

* 2-ம் வசனம்: “நோயேமி” -சுந்தரி.

3. நோயேமியுடைய கணவனான எலிமெலேக் செத்தான்; அவளோ தன்னிரு குமாரர்களோடு விடப்பட்டவளாயினாள்.

4. அவர்கள் ஓர்பாள் என்றும், ரூத் தென்றும் பெயர்கொண்ட இரண்டு மோவாபித்த பெண்களை விவாகம் பண்ணிப் பத்து வருஷமாய் அங்கு சஞ்சரித்தபின்னர், 

5. மஹலோனும் கேளியோனு மாகிய இருவருஞ் செத்துப் போக, நோயேமி புருஷனையும் இரு மக்களை யும் இழந்தவளாய் விடப்பட்டனள்.

6. கர்த்தர் தமது சனத்தை கிருபா கடாக்ஷமாய் நோக்கி அவர்களுக்கு சீவனத்துக்கு ஆகாரமருளினாரெனக் கேள்விப்பட்டு அவள் மோவாப் நாட்டிலிருந்து தன்னிரு மருகியோடு கூடத் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வர எத்தனித்தாள்.

7. ஆகையால் அவள் தன் இரு மருகி மாரோடும், தன் தேசாந்தர ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டு யூதா நாட்டிற்குத் திரும்பி வருகையில், 

8. அவள் தன் மருமக்களை நோக்கி: நீங்களிருவரும் உங்கள் தாய் வீட்டிற்குப் போங்கள். மரித்துப் போனவர்களுக்கும் எனக்குந் தயை செய்து வந்ததுபோலக் கர்த்தரும் உங்களுக்குத் தயவு செய் வாராக.

9. நீங்கள் கொள்ளவிருக்கும் புருஷ ருடைய வீட்டில் கர்த்தர் உங்களிருவருக் கும் பாக்கியத்தை அடையச் செய்வா ராக, என்று சொல்லி அவர்களை முத்தமிட் டாள். அவர்களோ ஓவென்று சப்தமிட் டழுது:

10. உம்முடைய ஜனத்தண்டைக்கே நாங்களும் உம்முடன் வருவோம் என்று சொன்னார்கள்.

11. அதற்கு நோயேமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப் போங்கள், என்னோடு ஏன் வருகிறீர்கள்? நான் உங்களுக்குப் புருஷரைக் கொடுப்பேனென்று நம்புவா னேன்? இனி என்ன, புத்திரப்பேறு எனக்கு ஆவதுண்டா? 

12. திரும்பிப் போங்கள், என் மக்களே, போய்விடுங்கள்! நான் வயது சென்றவள். இனி நான் ஒரு புருஷனு டன் வாழ என்னாலே கூடாது, நான் இன்று கர்ப்பந்தரிக்கவும், பிள்ளைக ளைப் பெறவுங் கூடுமென்பது முதலாய்,

13. அவர்கள் வளர்ந்து பெரியவர் களாகுமட்டும் நீங்கள் காத்திருக்க வேண்டியதாகுமே, அதற்குள்ளாக நீங்களும் கிழவிகள் ஆய்விட்டிருப்பீர் களே! (ஆதலால்) வேண்டாம், என் மக்களே! உங்களைக் கெஞ்சுகிறேன்; என்னோடு வராதேயுங்கள்; உங்களைப் பற்றி நான் கிலேசப்படுகிறேன், தேவனுடைய கை எனக்கு விரோமாயிருக்கிறதென்று சொன்னாள்.

14. அப்பொழுது அவர்கள் மறுபடி யும் ஓலமிட்டழத் துவக்கினார்கள். ஓர் பாள் மாமியை முத்தமிட்டுத் திரும்பிப் போய்விட்டாள்; ரூத்தோவெனில் தன் மாமியை நெருங்கிப் பிடித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தவளல்ல.

* 14-ம் வசனம். “பிரிந்தவளல்ல” - தன் மாமியின் மேலுள்ள பற்றுதலினால் அவளை விடடுப் பிரிய ரூத்துக்கு மனமில்லை.

15. நோயேமி அவளைப் பார்த்து: இதோ உன் உறவினள் தன் சனங்களிடத் திற்கும் தன் தேவர்களிடத்திற்குந் திரும் பிப் போய்விட்டாளே, நீயும் அவளோடு போ என்றாள்.

16. அதற்கு ரூத்: நான் உம்மை விட்டுப் போகும்படி எனக்கு அதிகமாய்ச் சொல்ல வேண்டாம்; நீர் எங்கே போனா லும் நானும் வருவேன்; நீர் எங்கே தங்கு வீரோ நானும் தங்குவேன். உங்கள் சனமே என் சனமும், உங்கள் தெய்வமே என் தெய்வமுமாயிருக்கும்.

17. நீர் எந்தப் பூமியில் இறந்து அடக்கம் பண்ணப்படுவீரோ, அந்தப் பூமியிலும் நான் இறந்து அடக்கஞ் செய்யப்படுவேன், சாவொன்றே உம்மை யும் என்னையும் பிரிக்கும், இல்லாவிடில் கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவா ராக (என்றாள்.)

18. தன்னோடுகூட வருவதற்கு ருத் ஒட்டார மனதாய்த் தீர்மானித்திருக்கிற தைப் பார்த்து நோயேமி அவளுக்கு அப்புறம் விக்கினம் பண்ணவுமில்லை, அவள் திரும்பிப் போகும்படி சொல்லவு மில்லை.

19. இப்படியே இருவரும் நடந்து போய்ப் பெத்லேமுக்கு வந்துசேர்ந்தார் கள். அவர்கள் ஊரில் வந்த செய்தி ஊரார் எல்லாருங் கேள்விப்பட்டார்கள். இவள் அந்த நோயேமிதானேவென்று பெண்டு கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

20. அவளோ: நீங்ள் என்னை நோயேமி (அதாவது: சுந்தரி) யென்பா னேன்? என்னை மாராள், (அதாவது, கைப்பாள்) என்று கூப்பிட வேண்டும்; ஏனெனில் சர்வ வல்லபர் என்னைக் கசப் பான வியாகுலத்தால் நிறைத்திருக்கிறார்.

21. சம்பூரணவதியாய்ப் போனேன், கர்த்தர் என்னை வெறுமையாகத் திரும்பி வரப்பண்ணினார். கர்த்தர் சிறுமைப் படுத்திச் சர்வ வல்லவர் துன்பப்படுத்திய என்னை நோயேமி என்று ஏன் அழைக் கிறீர்கள்?

22. இப்படியே நோயேமி மோவா பித்த தன் மருகியோடு தன் தேசாந்தரப் பூமியிலிருந்து புறப்பட்டு பெத்லேமுக் குத் திரும்பி வந்தாள். அப்பொழுது வாற் கோதுமை அறுப்பு ஆரம்பமாயிருந்தது.