ரூத்-போஸ்.
1. நோயேமியுடைய புருஷனான எலிமேலேக்குக்கு இரத்த சம்பந்தனும் செல்வாக்குள்ளவனும் பெருத்த தனவந்தனுமாகிய போயஸன்று ஒருவன் இருந் தான்.
2. மோவாபித்த ஸ்திரீயான ரூத்தென்பவள் தன் மாமியை நோக்கி: நீர் உத்தரவு கொடுத்தால் நான் வயல் வெளிக்குப் போய் எந்தக் குடியானவனுடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ அவர் பிறகே சென்ற அறுப்பறுக்கிறவர்களுடைய கைக்குத் தப்பின கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருவேன் என்க, அதற்கு நோயேமி: என் மகளே போகலாமென்றாள்.
* 2-ம் வசனம். “கைக்குத் தப்பின கதிர்களை”- லேவி. 19:9, 10 காண்க.
3. ரூத் அப்படியே போய் அறுக்கிறவர்கள் பிறகாலே கதிர்களைப் பொறுக்கினாள். அந்த வயல் நிலமோ எலிமெலேக்கின் இரத்த சம்பந்தனான போயஸன்பவனுடையதாயிருந்தது.
4. அந்நேரத்தில்அவன் பெத்லேமிலிருந்து வந்து அறுக்கிறவர்களை நோக்கி: கர்த்தர் உங்களோடிருப்பாராக என்றான். அதற்கு வேலைக்காரர்: கடவுள் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
5. பின்னும் போஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியான ஒரு வாலிபனை நோக்கி: இந்தப் பெண் யாருடையவள் என்று வினவினான்.
6. அதற்கு அவன் மோவாப் நாட்டினின்று, நோயேமியோடுகூட வந்த மோவாப் ஸ்திரீயாக்கும்.
7. அறுக்கிறவர்கள் பிறகே அரிக் கட்டுகளிலிருந்து சிந்தின கதிர்களைப் பொறுக்கிக் கொள்ளக் கேட்டாள். காலை துவக்கி இதுவரைக்கும் நிலத்திலேயே யிருக்கிறாள். சற்று நேரத்துக்காகிலும் அவள் வீட்டுக்குப் போகவில்லை என்று சொன்னான்.
8. அப்பொழுது போஸ் ரூத்தைப் பார்த்து: மகளே கேள்! பொறுக்கிக் கொள்வதற்காக நீ வேறு வயலிற் போகாமலும் இந்த இடத்தை விட்டு விலகாமலும் இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவேயிரு.
9. அவர்கள் அறுப்பு அறுக்கும் போது நீ பிறகே போ; ஒருவரும் உனக்குத் தொந்தரை செய்யக் கூடாதென்று என் ஆட்களுக்கு நான் கற்பித்திருக்கிறேன். அது மாத்திரமல்ல, உனக்குத் தாகம் எடுத்தாலோ தண்ணீர்க் குடங்கள் அண்டைக்குப் போய் வேலைக்காரர் குடிக்கிற ஜலத்தையே நீயும் குடிக்கலா மென்றான்.
10. அப்பொழுது அவள் தரையில் முகங்குப்புற விழுந்து, நமஸ்தரித்து, அவனை நோக்கி: தங்கள் கண்களில் எனக்குத் தயை கிடைத்ததும், பரதேசத்தாளாகிய என்னைத் தாங்கள் விசாரிக்கும்படி மனம் வைத்ததும் எதினாலே என்றான்.
11. அதற்குப் போஸ்: உன் புருஷன் மரணமடைந்தபிறகு உன் மாமியார் மட்டில் நீ செய்ததையும், நீ உன் பெற்றோரையும், உன் சென்ம தேசத்தையும் விட்டுவிட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததுமான சகலமுமே எனக்கு விபரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
12. உன் செய்கைக்கேற்ற பலனைக் கடவுள் உனக்கு அளிப்பாராக! நீ இஸ்றாயேல் தேவனாகிய கர்த்தரை நாடி அவருடைய திருப்பாதத்தை அடைக்கலமெனத் தேடிவந்தாயே, அவரால் சம்பூரணக் கைம்மாறு பெறுவாயாக என்றான்.
13. அதற்கவள்: என் ஆண்டவனே, உமது வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் நான் சமானமற்றவளாயினும் நீர் அடியாளைத் தேற்றி என் இருதயத்துக்கு (நல்) வாக்குச் சொல்லியபடியால் உமது கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததே (பாக்கியம்) என்றாள்.
14. மறுபடியும் போஸ் அவளைப் பார்த்து: சாப்பிடுகிற நேரமாகும் பொழுது நீ இங்கே வந்து அப்பஞ் சாப்பிடு; காடியில் உன் அப்பத் துணிக் கையைத் தோய்த்துக் கொள் என்றான். அவள் அப்படியே அறுக்கிறவர்களின் அருகே உட்கார்ந்து தனக்கு வறுத்த கோதுமையைப் புசித்துத் திருப்தியடைந்து மீதத்தை வைத்துக் கொண்டாள்.
15. பின்னும் வழக்கப்படி அவள் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள எழுந்தபோது போஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் உங்களோடுவட அறுக்க வந்தாலும் நீங்கள் அவளுக்கு விக்கினஞ் செய்ய வேண்டாம்.
16. உங்கள் அரிகளிலே வேணுமென்ற சிலதுகளைச் சிந்தி நிலத்தில் கிடக்க விடுங்கள்; அவள் கூச்சமின்றி பொறுக்கிக் கொள்ளட்டும்; அவள் பொறுக்கும்போது அவளை அதட்டாதீர்களென்று சொல்லிக் கற்பித்தான்.
17. அப்படியே அவள் சாயந்தர மட்டும் கதிர்களைப் பொறுக்கி, பொறுக்கினதைத் தடி கொண்டடித்துத் தூற்றி விட்டு சற்றேறக்குறைய மூன்று மரக்கால் கொண்ட ஒரு ஏப்பி அளவாய் வாற் கோதுமையிருக்கக் கண்டாள்.
18. அவள் அதைச் சுமந்துகொண்டு பட்டணத்துக்குத் திரும்பி வந்து தன் மாமிக்குக் காண்பித்ததல்லாதே தான் திருப்தியாய்ச் சாப்பிட்டுமீதி வைத்ததையும் அவளுக்கு ஒப்புக்கொடுத்தாள்.
19. அப்பொழுது அவளுடைய மாமி: இன்றைக்கு நீ எங்கே கதிர் பொறுக்கினாய்? எவ்விடத்தில் வேலை செய்தாய்? உன்மேல் தயவாயிருந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவனே என்று சொன்னாள். அவளோ இன்னாரிடத்தில் வேலை செய்தேனென்றும், அந்த மனித னுடைய பெயர் போஸ் என்றுஞ் சொன் னாள்.
20. அதற்கு நோயேமி: ஆண்டவரால் அவன் ஆசீர்வதிக்கப்படக்கடவான்! ஏனெனில் அவன் உயிரோடிருந்தவர்களுக்குஞ் செய்து வருகிறான் எனப் பதில் கூறி, மீண்டும் மருகியைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்குச் சொந்தக்காரன்தான் என்றாள்.
21. அப்பொழுது ரூத்: வெள்ளாண்மையெல்லாம் அறுத்துத் தீரும் வரையிலும் அவர் தன் வேலைக்காரிகளோடு கூட என்னை இருக்கச் சொன்னார் என்றாள்.
22. அதற்கு மாமி: மகளே, வேறொரு வயலிலே போனால் மனுஷர் உன்னை விக்கினஞ் செய்வார்ளாக்கும், ஆகையால் நீ இவனுடைய வேலைக்காரிகளோடு அறுக்கப்போவது உத்தமம் என்றாள்.
23. அப்படியே அவள் போஸுடைய வேலைக்காரிகளோடு கூடியிருந்து வாற் கோதுமை அறுப்புத் தீர்ந்து தானியங்க ளெல்லாம் உக்கிராணத்திற் சேருமட்டும் அவர்களோடு அறுத்துக் கொண்டிருந் தாள்.