முக்கிய அறிவிப்பு...

உலகளவில் 320kbps HD+ தரத்தில் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் கத்தோலிக்க வானொலியான நமது தேவமாதா சர்வதேச வானொலியில் தினமும் காலை 06.00மணிக்கு திவ்விய நற்கருணை ஆசீர்வாதமும், 06.15மணிக்கு திருப்பலியும் நேரடியாக ஒலிபரப்பாகின்றது. ஆலயம் செல்ல இயலாதவர்கள், வெளிநாடுகளில் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள், பயன்படுத்திக்கொள்ள அன்போடு வேண்டுகிறோம். பக்தியோடு திருப்பலியை தியானித்து ஆசைநன்மை செபத்தை சொல்லி திருப்பலியின் பரிபூரண பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.dreams.onlineradio

மேலே உள்ள லிங்க்'ல் நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் மொபைல் போன், ஆன்ட்ராய்ட் டிவி, லேப்டாப்-ல் நிறுவிக்கொள்ள முடியும். அல்லது https://www.radio.catholictamil.com/ நமது இணையதளத்தில் நேரடியாக கேட்டு தியானிக்கவும் முடியும்.

வாய்ப்பினை வழங்கி, ஊக்கப்படுத்தி துணைநிற்கும், சென்னை மயிலை உயர் மறைமாவட்டம், கீழச்சேரி பங்கின் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

குறிப்பு: விரைவில் பண்பலை அலைவரிசையில் ஒலிபரப்பினை துவங்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுமார் நான்கு கோடிக்கும் அதிகமான கத்தோலிக்க விசுவாசிகள் பயன்பெறுவர். தொடர்ந்து ஜெபிக்க வேண்டுகிறோம்.

சென்னை மயிலை உயர் மறைமாவட்டம், கீழச்சேரி பங்கின் வரலாற்றினை பின்வரும் பக்கத்தில் அறியலாம்!

https://www.church.catholictamil.com/p/500.html

நேரடி ஒலிபரப்பு
தினமும் காலை 06.00-07.00 மணி - நற்கருணை ஆசீர், திருப்பலி 
ஞாயிற்றுக்கிழமை காலை 06.30-08.00 மணி - முதல் திருப்பலி.
ஞாயிற்றுக்கிழமை காலை 08.30-10.00 மணி - இரண்டாம் திருப்பலி.
மாதத்தின் முதல்வியாழன் மாலை 06.00-80.00 மணி - ஆலயத்தைச் சுற்றி குழந்தை இயேசு தேர்ப்பவனி, திருப்பலி.
மாதத்தின் முதல்வெள்ளி மாலை 06.00-80.00 மணி - நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம், திருப்பலி.
மாதத்தின் முதல்சனி மாலை 06.00-80.00 மணி - செபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி.
மாதத்தின் 24-ம் நாள் மாலை 06.00-80.00 மணி - ஆலயத்தைச் சுற்றி சகாயமாதா தேர்ப்பவனி, திருப்பலி.
மேலும் ஆலயத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒலிபரப்பாகும்.

மற்ற நேரங்களில் இனிமையான கத்தோலிக்கப் பாடல்கள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி ஒலிபரப்பு செய்யப்படும். (20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன).  தொடர்ந்து இணைந்திருங்கள்.