"உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத் 6/21)
பதுவைப் பதியில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி, தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார். தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம்
அவர் பிரசங்கம் செய்யும்பொழுது வணிகர்கள் கடைகளை மூடி பிரசங்கம் கேட்பார்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் அருகில் அமர்ந்து அவர் சொல்வதை உன்னிப்பாய்க் கேட்பார்கள்.
சோதனையில் வெற்றி
எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் சுத்த போசனம் அனுசரிக்க வேண்டுமென்பது சில வருடங்களுக்கு முன்பு வரை கத்தோலிக்கர் !! கண்டிப்பாக கடைப்பிடித்து வந்த கட்டளையாக இருந்து வந்தது. ம். உலகின் மாறும் சூழ்நிலைக்கேற்பவும், ஒரு வேளை கூட உணவு கிடைக்காத ஏழைகளின் பொருட்டும் இச்சட்டம் அண்மையில் அகற்றப்பட்டது. அந்தோனியாரை சில பதிதர்கள் ஒரு விருந்திற்கு அழைத்தனர். அவரும் சம்மதித்தார். இறைச்சியை மீனைச் சமைப்பது போல சமைத்து, அவர் முன் வைத்தனர். தேவ அருளால் அந்தோனியார் ( இதனை அறிந்தார். செபம் செய்து உணவின் மீது சிலுவை அடையாளம் கல் = வரைந்தார். புலால் உணவு மீன் உணவாக மாறிவிட்டது. உண்டார்,
பதிதர் அவர் உண்டபின் அவர் சுத்த போசன நெறியை மீறியதாகச் சொல்லி இழித்துரைத்தனர். எஞ்சியிருந்த உணவை அவர் அவர்களிடம் காட்டினார். அது மீன் உணவாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து, "இவர் தேவ அருள் பெற்றவர். இவரை சோதிக்க நம்மால் இயலாது' என உரைத்தனர். அவரின் மதமே உண்மையான மதம் என பறைசாற்றினர். இப்புதுமை பற்றிய செய்தி எங்கும் பரவவே, அதன் பின் அவரை சோதித்திட எவரும் துணியவுமில்லை , முன் வரவும் இல்லை .
ஒரு நாள் பசாசு, உலகின் எல்லையை உம்மால் காட்ட முடியுமா? நான் காட்டுகிறேன் என்றதாகவும், அந்தோனியார் சிலுவை அடையாளம் வரைந்து இது தான் எல்லையென்றதாகவும் - பரம்பரை செய்தி கூறுகின்றது.
அவர் பதுவாபுரியில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார். ஆயின் அவரது சாதனைகள் பல. பதுவாபுரி அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பதுவைப் பதியர்
Posted by
Christopher