இரு இடங்களில் ஒருவர்
தேவாலயம் ஒன்றில் அந்தோனியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மடத்தில் கட்டளைச் செபம் செய்ய வேண்டியிருப்பதை நினைவு கூர்ந்தார். மௌனமானார். ஏதோ பெரிய காரியம் நடக்கிறது என மக்கள் எண்ணினர். மடத்திற்குச் சென்று, செபம் செய்து விட்டு திரும்பி வந்து மறை உரையைத் தொடர்ந்தார். இவ்வாறு ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருந்திடும் மேலான வரத்தை இறைவன் அவருக்கு அருளியிருந்தார்.
1226ம் ஆண்டு உத்தரிக்கிற ஆன்மாக்கள் திருநாளன்று தூய சின்னப்பர் ஆலயத் திடலில் பிரசங்கம் செய்தார். அவர் பேசிய பொருள்:
"மாலையில் அழுகை நமது விருந்தினன்காலையில் மகிழ்வு நமது விருந்தாளி” என்பதே
தவளைகளை அடக்குதல்
அந்தோனியார் வாழ்ந்த மடத்தைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் ஏராளமான தவளைகள் வாழ்ந்தன. அவை எழுப்பிய ஒலி குருமட மாணவர்களுக்கு இடையூறாகவும், அவர்கள் படிப்பிற்கு தடையாகவும் இருந்தது. மேலும் ஒரே நிலையில் மனதை நிலைநிறுத்த செபம் செய்வதையும் தடுத்தது. கடின உழைப்பு, கனமான பாடச் சுமையுள்ள படிப்பு இவற்றால் சோர்ந்த அவர்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த சமயத்தில் நித்திரை செய்யவும் இயலவில்லை . இதனால் அவர்கள் பெரும் அவதியுற்றனர். "மனிதர் என்றால் 'பேசாதே' என்றால் கேட்பார்கள். மண்டூகங்கள் அவ்வாறு கேட்காதே? நாம் சொன்னால்...? ஆனால் அந்தோனியார் அவைகளுக்கு கட்டளையிட்டால்? நிச்சயமாக் கேட்கும்" எனத் தங்களுக்குள் கூறலாயினர். இது பற்றி அந்தோனி யாரிடம் முறையிட்டனர். கனிவடனும், பரிவுடனும் அவர்கள் குறையினைக் கேட்ட அந்தோனியார் வெளியிற் சென்று தவளைகளை நோக்கி: "தவளை சகோதரர்களே! அமைதியாக இருங்கள்" என்றார். அது முதல் அவைகளால் தொல்லை ஏற்படவில்லை. ஆம்! அந்தோனி யாருடன் இறைவன் எப்பொழுதும் இருந்தார். நம்பிய அவரை மகிமைப்படுத்தினார்.
செல்வச் செருக்குற்றவன் திருந்துதல்
பிரான்ஸ், புவான் வெலே நகரில் பெரும் செல்வந்தன் நல்ல பதவி வகித்தவன் - தீய வாழ்வு வாழ்ந்தான். ஆலயத்திற்கு வருவதில்லை மறையுரைகள் கேட்பதும் இல்லை. சாலையில் அவன் செல்லும் பொழுது அந்தோனியார் அவனுக்கு தலை வணங்கினார். அந்தோனியார். பெரும் பிரசங்கியார், பக்திமான், என அவன் கேள்விப்பட்டிருந்தான். அந்தோனியாரின் செய்கை அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இவ்வாறு மூன்று தினங்கள் நிகழ்ந்தது. ஒரு நாள் அவன் முன் நடுச்சாலையில் முழந்தாட்படியிட்டார் அந்தோனியார். அவன் வெருண்டான். "இறைவன் உன்மீது அன்புள்ளவர், கருணை உள்ளவர், எனக்கு வேதசாட்சியாகும் பேற்றை இறைவன் தரவில்லை. உனக்கு தருவதாக இறைவன் எனக்கு அறவித்தார். மனந்திரும்பு” என்றார். அவன் மெளனமாய் அவ்விடத்தை விட்டகன்றான். தன் வாழ்வை படிப்படியாய்த் திருத்தினான். சிலுவை யுத்தத்தில் பங்கேற்று பாலஸ்தீனாவில் வேத சாட்சியாய் இறந்தான்.) இறக்கு முன் அந்தோனியார் உரைத்த தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தினான்.
அற்புத நீரூற்று குகை
லிமேஜிலிருந்து 70 மைல்களுக்கு அப்பாலிருந்த பிரிவே என்ற நகரில் ஒரு புதிய மடத்தை அமைத்தார். இங்குள்ள மக்கள் பரம ஏழைகள். புனிதர் தனக்கென ஒரு குகையைத் தேடி அதில் வாழ்ந்தார்.
குடிநீர் இல்லாது துறவிகள் அவதிப்பட்டனர். புனிதர் இறைவனை ) வேண்டினார். ஒரு நீரூற்று அற்புதமாய் தோன்றியது. அவரது பக்தர்கள் அதனையும், அவர் குகையையும் இன்றும் சந்தித்து மகிழ்கின்றனர்.
மழையிலிருந்து பாதுகாப்பு
அவரது மறையுரையைக் கேட்க பெருவாரியான மக்கள் கூடினர். திடீரென இடியுடன் பெரும் மழை பெய்தது. அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. அவரது அமுத வாக்கால் கட்டுண்டு இருந்த இடத்திலேயே இருந்தனர். ஒரு துளி மழை கூட அவர்கள் மீது விழவில்லை. மற்ற இடங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு. லிமேஜின் மக்கள் இதனைக் கண்டு வியப்படைந்தனர்.
தூயவர் இக்காலத்தில் மாந்தியோ நகர் மடத்திற்கு அடிக்கடி சென்று ஏகாந்த வாழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
புதுமைகளில் சில
Posted by
Christopher