செல்வந்தன் ஒருவனின் அடக்கத்தின் போது பிரசங்கம் செய்ய அந்தோனியார் அழைக்கப்பட்டார். அந்தோனியார் முதலில் உடன்படவில்லை .
பண ஆசையால் இவன் தன் வாழ்நாளைப் பாழாக்கியவன், ஆலயஞ் செல்ல நேரமில்லை. செபம் செய்ய சமயமில்லை. பொருள், பொருள்' என எண்ணி தீய வழிகளில், பொருள் சேர்த்தவன். அநியாய வட்டிவாங்கி பணத்தைத் திருப்பித் தராத ஏழைகளை எட்டி உதைத்து : அடித்து காயப்படுத்திய கொடுமைக்காரன். பொருள் சேரச்சேர இன்னமும் பொருள் வேண்டுமென்ற பேராசை கொண்டு பழி மேல் பழியையும் பாவத்திற்குமேல் பாவத்தையும் கட்டிக்கொண்டான். இயேசுநாதர் உவமையாகச் சொன்ன அறிவில்லா செல்வந்தனைப்போல் இருந்தான்.
இந்த சீமான் தன் வயல்களில் அமோகமாக விளைந்த தானியங்களைத் தன் களஞ்சியத்தில் சேர்த்தான். இறுமாப்புடன் அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டது. "நெஞ்சே, பல்லாண்டுகளுக்கு வேண்டிய பொருள் உனக்கு ஏராளமாய் உள்ளது. இளைப்பாறு; உண்டு குடித்து விருந்தான் என்று சொல்லிக் கொள்வேன் என்றான்; ஆனால் கடவுள், 'அறிவிலியே' இன்றிரவே உன் உயிரை வாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்கு கிடைக்குமோ?' என்றார். கடவுள் முன் செல்வம் இல்லாதவனாய், தனக்காகவே செல்வந்திரட்டுகிறவன் இவ்வாறே இருக்கிறான்” (லூக் 12/19-21)
அந்தோனியார் இச்செல்வந்தனைத் திருத்த முயன்றார். அவனுக்கு எச்சரிக்கை விடுவித்தார். நாம் இறக்கும்போது நம்முடன் வருவது நமது பாவ புண்ணிய மூட்டைகளே, நித்தியத்திற்கும் தண்டனைக்குள்ளாகாது மனம் வருந்தி ஈகையால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றார். அவரின் நல்லுரைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. மூர்க்கனும் முதலையும் கொண்ட பிடியினை - விடாதது போல அப்பேராசைக்காரனும் மனம் திரும்பவில்லை. திடீரென விழும் அடி மரம் போல், சடுதி மரணமடைந்தான்.
“உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத் 6.21) என்ற வேத வசனத்தின் மீது அவர் மறை உரையாற்ற விரும்பினார். இதனை அவன் உறவினர்கள் விரும்பவில்லை . மரபுப்படி அவனை புகழ்ந்து பேசுவார் என எண்ணினர். விட்டுக் கொடுக்காமல் பேராசையின் நிலையை பிரசங்கம் செய்து முடித்தார்.
இறுதியில் உறவினர் அவன் சவப்பெட்டியைத் திறந்தனர். அவனது இதயம் அங்கில்லை; பணப்பெட்டியில் இருதயம் இருந்ததை கண்டு அஞ்சி நடுங்கினர்.
ஒட்டகமானது ஊசித்துவாரத்தில் நுழைவது எளிது; செல்வந்தன் பரம செல்வம் மிக அரிது என உணர்ந்தனர்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பணப் பெட்டியில் இருதயம்
Posted by
Christopher