"மூன்று வித காலை-மாலை உள்ளன. ஒவ்வொன்றிலும் அழுகையும், அகமகிழ்வும் உண்டு. ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டு, நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைப்பாய்'' எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் வந்த அழுகை முதல் மாலையாகும்.
''உங்களுக்கு நற்செய்தி கொண்டு வந்துள்ளேன்" என வான தூதரால் அறிவிக்கப்பட்ட அன்று இயேசு பிறந்தது மிக அக்களிப்பான முதல் காலை.
''எருசலேம் குமாரத்திகளே உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக் காகவும் அழுங்கள்" என்ற இயேசுநாதர், மரணமடைந்தது இரண்டாவது அழுகையின் மாலை.
அருளப்பர் கூறுவது போல் உயிர்த்த இயேசுவை அப்போஸ்தலர் கண்டு களித்தது மகிழ்வான இரண்டாவது காலை..
சாராள் இறந்ததற்கு ஆபிரகாம் துக்கப்பட்டார். அதைப்போல ஒவ்வொருவரும் இறப்பது அழுகையின் மூன்றாவது மாலை.
இசையாஸ் தீர்க்கதரிசி “நித்திய மகிழ்வு அவர்கள் தலையின் மேலிருக்கும்” என்றவாறு தூயவர்கள் அனைவரும் உயிர்த்தெழுதல் , மகிழ்வான மூன்றாவது காலை என இவ்வமயம் அழகுற எடுத்துரைத் துள்ளார்.
துறவியின் சோதனையை நீக்குதல்
இதற்கடுத்த தினம் துறவியர்களுக்கு ஆற்றிய மறை உரையில் “மாடப்புறாவின் சிறகுகளை எனக்கு அளிப்பவர்கள் யார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேன்" என்ற தலைப்புடன் உலகம் நிலையாமை யைச் சுட்டிக் காட்டினார். அயராத உழைப்பு, ஏனைய மடங்களில் ஆய்வு நடத்தி துறவிகளுக்கு ஆர்வமூட்ட பல பயணங்கள் என்பனவற்றால் மிகச் சோர்வுற்றார் தூயவர்.
லிமேஜ் மறைமாவட்டத்தில் உள்ள சோலினாக் பட்டணத்தில் அவர் பிணியுற்ற போது ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகள் தம் மடத்திற்கு அந்தோனியாரை அழைத்துச் சென்றனர்.
பிணி நீங்க தக்க பணிவிடை செய்த இச்சபைத் துறவி ஒரு பெரும் சோதனையால் பீடிக்கப்பட்டிருந்தார். உபவாசம். செபம் உடல் வாதனைகள் செய்தும் சோதனைகள் நீங்கவில்லை.
பழைய ஏற்பாட்டு சூசன்னாள், தன் உயிரை விட கற்பினை மேலென நினைத்தாள்.
அந்தோனியாரின் சாந்த வாழ்க்கை, தூய எளிய போக்கு இத்துறவியைக் கவர்ந்தது. தனது சோதனையை அந்தோனியாரிடம் சொல்லி நல்லதோர் பாவசங்கீர்த்தனம் செய்தார். தனது திருவுடயை அவருக்கு அணிவித்தார். உடனே சோதனையும் அவரை விட்டகன்றது. அதன் பின் எந்த சோதனையும் அவருக்கு ஏற்படவில்லை . அவர் நம் புனிதரின் துயர வேளையில் அவருக்கு உதவி செய்ததால் இம் மேலான நிலையினை அடைந்தார்.
சாத்தானின் தோல்வி
பதிதர் பலரை மெய்மறையில் சேர்த்தவர் நம் தூயவர்; மட்டுமல்ல பல பாவிகளை மனம் திருப்பியவர். மறையுரைச் சிங்கம். எனவே சாத்தான் இவர் மீது வஞ்சினங் கொண்டு தொலைத்திடத் திட்டமிட்டது. அதன் திட்டத்தை வெட்டவெளிச்சமாக்கினார் இறைவன்.
ஒரு நாள் அவர் மறையுரை ஆற்றும்போது மக்களை நோக்கி ''இப்பிரசங்க மேடையைச் சாத்தான் திடீரென்று இடித்து வீழித்துவான், பயப்படாதீர்கள். ஒரு ஆபத்தும் வராது ஆண்டவர் காப்பார்” என்றார். அவர் சொல்லி முடித்ததும் மேடை பலத்த ஓசையோடு கீழே விழுந்தது. ஒருவருக்கும் ஒரு தீங்கும் ஏற்படவில்லை .
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
மூன்று வித காலை மாலை
Posted by
Christopher