''ஏழைகளுக்கு இரங்குகிறவன் ஆண்டவருக்கு வட்டிக்குக் கொடுக்கின்றான்" (பழமொழி 19/17)
எரியும் திரி எரியும் திரி பிறருக்கு வெளிச்சம் தர தன்னையே மாய்த்துக் கொள்கிறது. இயேசு உலகின் ஒளி, நாம் ஒளியில் நடந்திட தன் உயிரையே அர்ப்பணித்தார். இருளில் வந்த மக்களுக்கு மெய் ஒளியினைக் காட்டச் சென்று உயிர் துறந்த வேத சாட்சிகள் பலர்.
இதோ எளியும் திரிபோல் தேவநேசத்தால் பற்றி எரிந்த அந்தோனியாரும் தனது கடின உழைப்பால் உடல் நலம் குன்றிவரலானார். ஆயினும் அவர் தனது திருப்பணியை விட்டவரல்ல.
அநியாய வட்டி வாங்குதல் அக்காலத்தில் பதுவையில் அதிகமாகக் காணப்பட்டது. கடன்பட்டவர்கள் சிறைபட்டனர். நாடு இழந்தனர். வீடு இழந்தனர். துன்புற்றனர். அவர்கள் மீது அவர் இரக்கமுற்றார். அநியாயவட்டி வாங்குபவர்களை வன்மையாகக் கண்டித்தார்.
"வறியோருடைய உணவு அவர்களுடைய உயிர். அவர்களிட மிருந்து அதைப் பறிக்கிறவன் இரத்தத்தின் மனிதனாய் இருக்கிறான்" (சீராக்: 34/25)
"ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் விடுதலை செய், சுமையானதை எல்லாம் உடைத்தெறி” (இசையாஸ் 58/6)
அவரின் மறைஉரை கேட்டு மனமாற்றம் அடைந்தவர் தங்கள் கடன்காரர்களுக்கு மன்னிப்பு அளித்தனர். நமது கடன்காரர்களுக்கு நாம் மன்னிப்புத் தர மறுத்தால் இறைவன் நம்மை மன்னிப்பாரா?
அரசின் சம்மந்தப்பட்ட துறையினரிடம் அந்தோனியார் கடன் நிவாரணம் பற்றி எடுத்துரைத்து 1231ல் கடன் நிவாரண சட்டம் பிறப்பிக்கச் செய்தார். அச்சட்டம் கடன்பட்டவரை சிறைப்படுத்தலாகாது, அவர்தம் சொத்துக்களை ஈவு இரக்கமின்றி எடுத்துக் கொள்ளலாகாது, அநியாய வட்டி வாங்கலாகாது- என வரையறுத்தது.
"பிரான்சிஸார் சபை, வணக்கத்திற்குரிய ஞானாசிரியர் அந்தோனி யார் விருப்பப்படி இச்சட்டம் 1231ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15ம் நாள் அமுலாக்கப்படுகிறது” என்று அச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனை இன்றும் காணலாம்.'
"அநியாய வட்டி பெறுபவன், மலத்தினை அதிக சிரமப்பட்டு பந்தாக உருட்டும் வண்டு. எதிர்ப்படும் கழுதை ஒன்றின் காலில் மிதிபட்டு அவ்வண்டும், உருண்டையும் அழிவதைப் போல கஞ்சனும் அநியாய வட்டி வாங்குபவர்களும் இதே நிலையையே அடைவர். அசுத்த பணத்தை இவர்கள் கஷ்டப்பட்டுத் திரட்டுகின்றனர். சாத்தான் அவர்களை இறுதியில் கொல்கின்றது. விளைவு? அவர்கள் ஆன்மா பசாசின் உடமையாகிறது. உடல் புழுக்களுக்கு இரையாகின்றது. சேர்த்து வைத்த பொருள் உறவினர்களை அடைகின்றது:
"பணத்தையும் மாய்ந்து போகும் புகழையும் விரும்புபவர் சாத்தான் முன் விழுந்து அவனை ஆராதிப்பவராவர்” என நம் அறநெறி அண்ணல் அந்தோனியார் எழுதியுள்ளார்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
கடன் நிவாரணச் சட்ட ஆலோசகர்
Posted by
Christopher