பெரிய வியாழனன்று தூய இராயப்பர் தேவாலயத்தில் புனிதர் ஆற்றிய பிரசங்கத்தின் போது கூறியதாவது:பராக "அவரைத் தகுதியாய் உட்கொள்பவர் இருவித நற்பேற்றினை அடைவர். சோதனைகள் குறைதலும், பக்தி வளர்தலுமே அவை.
கசப்பானதை இனிப்பானதாய் மாற்றி நமது இதய பக்திக்கு உணவளிக்கின்றார். தேவசிநேகம், பச்சாத்தாபம் என்ற திருமண ஆடையின்றி பந்தியிலமரும் தகுதி இல்லாதவர் சாபத்திற்குத் தன்னை கையளிக்கின்றனர்".
பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர் பிரசங்கத்தைக் கேட்க கூடலாயினர். ஆலயத்தில் இடமில்லாது போயிற்று. இதனால் திறந்த வெளிகளில் அவர் சொற்பொழிவு ஆற்ற வேண்டியதாயிற்று.
தத்தளித்த துறவி திடம் பெறுதல்
அவரின் அரிய போதனைகளைக் கேட்ட பீற்றர் என்ற இளைஞன், சபையின் திருவுடைகளை அந்தோனியாரிடமிருந்து பெற்றான்.
சோதனை வந்து அவனை அலைக்கழித்த போது திருவுடைகளை அணிய விருப்பம் இன்றித் தத்தளித்தான்.
அந்தோனியார் அவனைத் தம் அறைக்கு அழைத்துச் சென்று அவனது வாயைத் திறந்து "பரிசுத்த ஆவியைப் பெறுவாய்" என்றார். சோதனை நீங்கி, உண்மையான துறவியாக வாழ்ந்தான்.
ஞான வாழ்வில் நிலைத்திட நமக்கு தூய ஆவியின் அருள் தேவை. இதை இன்று நாம் உணர்கின்றோமா?
அவரின்றி இறைவாக்கு இல்லை.
திருச்சபை இல்லை .
வழி நடத்துதல் இல்லை .
பாதுகாப்பில்லை.
அவர் தரித்திரத்தின தந்தை .
உத்தம ஆறுதலானவர்.
வணங்காததை வணங்கப்பண்ணுபவர்.
தவறினதைச் செவ்வனே நடத்துபவர்.
ஞானம், புத்தி, விமரிசை, அறிவு, திடம், பக்தி, தெய்வபயம் என்ற நற்கொடைகளைத் தருபவர். நன்மரணத்தையும், விண்ணுலகையும் அருள்பவர். ஆனால் இன்று நம்மால் அவர் மறக்கப்பட்டுள்ளார். இது மாபெரும் தவறு.
அற்புதப் போதகர்
தூய அந்தோனியார் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்:
"தூய ஆவியானவர் ஒரு ஆன்மாவின் மணவாளனாகும்போது விண்ணுலக வன்மையால் அதனை உடுத்துகின்றார். இறுதிவரை நிலைநிற்கும் ஆற்றலையும், பலவீனருக்கு பலத்தையும், துன்பத்தில் ஆறுதலையும் தருகின்றார். இதனை மனதிற் கொண்டு அவரை நம்புவோம். நலன்களால் நிரப்பப்படுவோம்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பெரிய வியாழன் மறையுரை
Posted by
Christopher