ஜுன் 01

அர்ச். ஜஸ்டின். வேதசாட்சி (கி.பி. 167) 

இவர் சமாரியா தேசத்தில் அஞ்ஞானிகளான பெற்றோரிடமிருந்து பிறந்து, சிறந்த கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, உயர்ந்த சாஸ்திரங் களைப் படித்து பெயர்பெற்ற தர்க்க சாஸ்திரியானார்.

இவர் உலக சாஸ்திரங் களைக் கற்றறிந்தாலும், சர்வேசுரனையும் அவருடைய இலட்சணங்களையும் பற்றி அறிந்தவரல்ல.

ஒரு நாள் இவர் தனிமையாய்க் கடற்கரையில் சர்வேசுரனைப் பற்றி தியானித்துக்கொண்டு போகையில் சடுதியில் ஒரு முதியவர் அவருக்குக் காணப்பட்டு, ஜஸ்டினுடைய சந்தேகங்களைக் கேட்டு அறிந்தபின், அஞ்ஞானிகளான சாஸ்திரிகள் சர்வேசுரனை அறியாமலும், அவரை பற்றிய உண்மைகளைப் கற்பிக்காமலும் இருக்கிறார்கள்.

நீ சத்திய தேவனைப் பற்றி அறிய வேண்டுமாகில் தீர்க்கதரிசிகள் சேசுநாதரைப்பற்றி எழுதி வைத்த வைகளை வாசித்தால், சர்வேசுரனை அறிவாயென்று சொல்லி மறைந்தார்.

ஜஸ்டின் தாமதியாமல் கிறிஸ்தவர்களுடைய வேதாகமங்களை வாசித்தபின் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்தவ வேதமே சத்திய வேதமென்றும், மற்ற வேதங்கள் அசத்தியமானவை என்றும் தெளிவாய் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டினார்.

மேலும் ஊர் ஊராய் பிரயாணஞ் செய்து தம் நல்ல புத்திமதியாலும் புத்தகங்களாலும் அநேகர் சத்திய வேதத்தில் உட்படும்படி செய்தபடியால் நாட்டு அதிபதியால் பிடிபட்டு வேதத்திற்காகக் கொல்லப்பட்டார்.

யோசனை 

நமக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட விசுவாசத்தைப் பெரும் பொக்கிஷம் மாகப் பாவித்து அதை விருத்தி செய்ய முயலுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பம்பிலியுஸ், கு.வே.
அர்ச். காப்ராயிஸ், ம.
அர்ச். பீற்றர், ம.
அர்ச். விஸ்டன், வே.