அர்ச். கொலெத்தம்மாள். கன்னிகை (கி.பி. 1447).
அர்ச். கொலெத்தம்மாளின் பெற்றோர் ஏழைகளாயிருந்தாலும் உத்தம கிறீஸ்தவர்களாய் வாழ்ந்து வந்தார்கள்.
தங்கள் ஊரில் யாதொருவர் சண்டை சச்சரவு செய்யும்போது அவர்கள் சண்டையை நிறுத்தி சமாதானம் செய்வார்கள்.
இப்பேர்ப்பட்டவர்களின் குமாரத்தியாகிய கொலெத்தம்மாள் தன் பெற்றோர் போல் புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தாள்.
இவள் எப்போதும் தன் ஒன்றுமில்லாமையை நினைத்து, சகலரிலும் தன்னைப் பெரும் பாவியாகப் பாவித்து தாழ்ச்சிக்கொள்வாள்.
ஏழைகளுக்குத் தன்னால் இயன்ற உதவி களைச் செய்துவந்தாள்.
இவளுடைய தாய் தகப்பன் மரித்தபின் இவள் அர்ச். பிரான்சீஸ்குவின் மூன்றாம் சபையில் சேர்ந்து சகல புண்ணியங்களையும் வெகு நுணுக்கமாய் அநுசரித்தாள்.
அர்ச். பிரான்சீஸ்கு, கொலெத்துக்குத் தோன்றி, தளர்ச்சியடைந்த மூன்றாம் சபையை சீர்திருத்தக் கூறினபடியால், இப்புண்ணியவதி தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் பரிசுத்தப் பாப்பரசரின் அனுமதியின்பேரில் அந்தச் சபையை சீர்திருத்தினாள்.
மேலும் இப்பெண் மேலான புண்ணியங்களையும் தவங்களையும் புரிந்து, சேசுநாதருடைய திருப்பாடுகளின் மட்டில் விசேஷ பக்தி வைத்து நாள்தோறும் அவற்றைப்பற்றி தியானிப்பாள்.
வெள்ளிக்கிழமைகளில் கடின ஒருசந்தி இருந்து, திருப்பாடுகளைத் தியானித்து கண்ணீர் சிந்துவாள்.
இவ்வாறு புண்ணியத்தில் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கிய இக்கண்ணிகை அர்ச்சியசிஷ்டவளாய் மரித்தாள்.
யோசனை
யாதொரு குடும்பத்தில் சண்டை, பகை, மனஸ்தாபமுண்டாகும் போது, நமது புத்தியால் அவர்களை சமாதானப்படுத்துவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். க்ரோட்காங். மே.து.
அர்ச். பிரிடொலின். ம.
அர்ச். பால்டிரட், மே.
அர்ச். கினிபர்ஜும் துணை ., து.
அர்ச். கட்ரோ , து.