அர்ச். சிரிலும், மெத்தோடியும் - மேற்றிராணியார் (கி.பி. 870)
சகோதரர்களான சிரில், மெத்தோடியுஸ் என்பவர்கள் தெசலோனிக்கா நகரில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்து சிறு வயதிலேயே புண்ணிய வழியில் நடந்தார்கள்.
சிரில் மகா புத்தி சாமர்த்தியத்துடன் சகல சாஸ்திரங்களிலும் தேர்ந்து, சாஸ்திரியென்னும் பட்டப்பெயர் பெற்று, பிறருடைய ஆத்தும் இரட்சண் யத்திற்காக உழைத்து வந்தார். மெத்தோடியுஸ் துறவற அந்தஸ்தில் சேர்ந்து அரிதான புண்ணியங்களை அனுசரித்து வந்தார்.
சிரில் சீத்திய தேசத்திற்குச் சென்று காட்டுமிராண்டிகளான அத்தேசத்தாரை சத்திய வேதத்தில் சேர்த்து, பல்கேரிய தேசத்திற்குப் போய் அங்கு மெத்தோடியுஸோடு சேர்ந்து அத்தேசத் தாருக்கு வேதம் போதித்தார்.
அத்தேசத்து அரசன் ஒரு மாளிகை கட்டி, அதை அநேக சித்திரங்களால் அலங்கரிக்க எண்ணி, சித்திர வேலையில் கைதேர்ந்த மெத்தோடியுஸை வரவழைத்து, பயங்கரத்தை வரவழைக்கும் ஒரு படத்தை வரைய கட்டளையிட்டான்.
அவர் பொதுத் தீர்வை படத்தை எவ்வளவு நேர்த்தியாய் சித்தரித்தாரெனில், அரசன் அதைப் பார்த்து அதன் அர்த்தத்தை அறிந்தவுடனே, பயந்து நடுங்கி, சத்திய வேதத்தை அறிந்து ஞானஸ்நானம் பெற்று, சில காலத்திற்குப்பின் உலகத்தை துறந்து துறவியானான்.
இரு அர்ச்சியசிஷ்டவர்களும் பாப்பானவரிடம் மேற்றிராணிப்பட்டம் பெற்று வெவ்வேறு தேசங்களுக்குச் சென்று சத்திய வேதத்தைப் போதித்து அநேக மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.
பிறகு சிரில் உரோமைக்குத் திரும்பிவரும் வழியில் வியாதியுற்று அவ்விடத்தில் மரணமானார்.
மெத்தோடியுஸ் தமக்கு வயதாகும் மட்டும் திருச்சபைக்காக உழைத்து முதிர்ந்த வயதில் மோட்ச சம்பாவனைக்குள்ளானார்.
யோசனை
நாமும் அடிக்கடி பொதுத் தீர்வையைப்பற்றி தியானித்து வருவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பான்டேனுஸ், து.
அர்ச். உவில்லிபால்ட், மே.
அர்ச். எட்டா , மே.
அர்ச். எடெல்பர்கா, க.
அர்ச். பெலிக்ஸ், மே
அர்ச். பெனெடிக்ட், பா.