அர்ச். யுலோஜியுஸ். வேதசாட்சி (கி.பி. 859).
மிகுந்த செல்வந்தரான யுலோஜியுஸ் ஸ்பெயின் தேசத்தில் குருப்பட்டம் பெற்று, திருச்சபைக்காக ஊக்கத்துடன் உழைத்து வந்தார்.
அக்காலத்தில் ஸ்பெயின் தேசம் முகமதியர்களுடைய கொடுங்கோன்மைக்கு உட்பட்டிருந் ததினால் கணக்கில்லாத கிறீஸ்தவர்கள் வேதனைப்பட்டு வேதசாட்சிகள் ஆனார்கள்.
உயர்ந்த கோத்திரத்திலுள்ள ஒரு முகமதிய பெண் இரகசியமாய் ஞானஸ்நானம் பெற்றிருந்தமையால் யுலோஜியுஸுடைய ஆலோசனைப்படி அவள் தன் ஊரை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போனாள்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட முகமதிய அதிபதி யுலோஜியுஸைப் பிடித்து நிஷ்டூரமாய் அடித்து சிறையில் போடக் கட்டளையிட்டான்.
இவர் சத்திய வேதத்தின் நிமித்தம் கொல்லத் தீர்வையிடப்பட்டு கொலைக்களத்திற்குக் கூட்டிக்கொண்டு போகப்படுகையில், முகமது மெய்யான தீர்க்கத்தரிசியல்லவென்று இவர் சாதித்ததினிமித்தம் ஒரு சேவகன் இவரைக் கன்னத்தில் குரூரமாய் அறைய வேதசாட்சி மறு கன்னத்தை திருப்பிக் காட்டி மகா சந்தோஷத்துடன் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
இந்த வேதசாட்சியைப் பின்பற்றி, நாம் ஞானஸ்நானம் பெருகையில் விட்டு விட்ட உலகம், பசாசு, சரீரத்தின் கெட்ட ஏவுதலுக்குக் காது கொடாமல் இருப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். சொபிரோனியுஸ், பிதா.
அர்ச். ஏன்கஸ், மே.
அர்ச். கன்ஸ்ட ன்டயின், வே.