அர்ச். தொமிதில்லம்மாள். கன்னிகை, வேதசாட்சி (6-ம் யுகம்)
ப்ளாவியா தொமிதில்லா என்பவள் இராஜக் கோத்திரத்தில் பிறந்து, சக்கரவர்த்தியான தொமிசியானுக்கு நெருங்கிய உறவினளாயிருந்தாள்.
தொமிசியான் சக்கரவர்த்தி தொமிதில்லாவையும் அவளுடைய மாமனாகிய கிளமென்ஸ் என்பவரையும் வேதத்தினிமித்தம் சிறைப்படுத்தி, கிளமென்ஸைக் கொலைசெய்து தொமிதில்லாவை பரதேசத்திற்கு அனுப்பினான்.
தொமிதில்லா தனது இராஜ கிரக உத்தியோகஸ்தரான நெறயஸ், அக்கிலேயஸ் என்பவர்க ளுடன் பரதேசத்தில் புண்ணியங்களையும் தர்மச் செயல்களையும் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தாள்.
தொமிதில்லாவும் இரு உத்தியோ கஸ்தரும் தனித்தனி அறைகளில் வசித்து, ஜெப தபங்களைச் செய்து மகா கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்தபடியால், அந்த இடம் அவர்களுக்கு ஒருவித வேதனைக்குரிய ஸ்தலமாயிருந்தது.
தொமிசியான் இறந்தபின் திராஜான் உரோமை இராச்சியங்களுக்கு சக்கரவர்த்தியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட காலத்தில், வேதத்தினிமித்தம் பரதேசத்திற்கு அனுப்பப் பட்ட கிறிஸ்தவர்களை விடுதலையாக்க கட்டளையிட்ட போதிலும், தொமிசியா னுடைய உறவினர்களை கொலை செய்வித்தான்.
தொமிதில்லா பொய்த் தேவர்களை வணங்காததினால் அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி இராயன் கட்டளையிட்டான்.
யோசனை
இந்த இராஜக் கன்னிகையை நாமும் கண்டுபாவித்து, சுகபோகம் முதலிய வைகள் மாயையென்றும், புண்ணிய மார்க்கமே நித்திய சம்பாவனைக்கு அழைத்துச் செல்லுமென்று அறிந்துகொள்வோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். நெரெயஸும் துணை., வே.
அர்ச். பங்கிராஸ், வே.
அர்ச். எபிபானியுஸ், மே.
அர்ச். ஜெர்மானுஸ், மே.