ஜுன் 12

அர்ச். பாகொந்தெஸ் ஜான். துதியர் (கி.பி. 1479) 

இவர் ஸ்பெயின் தேசத்தில் பாகொந்தெஸில் பிறந்து சாஸ்திரங்களைக் கற்றறிந்து குருப்பட்டம் பெற்று தமது ஞான வேலையை மிக கவனத்துடன் செய்து வந்தார்.

உத்தமதனத்தின் மீது இவருக்குண்டாயிருந்த பற்றினால் சகலத்தையும் துறந்து விட்டு அர்ச். அகுஸ்தின் சபையில் சேர்ந்தார்.

மடத்திலுள்ள அனைவரையும்விட, இவர் சகல புண்ணியங்களையும் உத்தம மாய் அனுசரித்து மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாக விளங்கினார்.

ஜான் இருந்த பட்டணத்தில் சண்டை, மனஸ்தாபத்தால் அநேக கொலைகளும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்தபடியால், இவர் தமது பொது பிரசங்கத்தாலும் தனி புத்திமதியாலும் அவ்வூரார் தங்கள் பாவச் செயல்களை உணர்ந்து மனந் திரும்பினார்கள்.

ஆனால் ஒரு பிரபு செய்த பாவத்தைக்குறித்து இவர் அவனைக் கண்டித்ததினால் இவர்மேல் அவன் வெறுப்புற்று இவரைக் கொலை செய்யும்படி இரு பாதகரை இவரிடம் அனுப்பினான்.

அந்தப் பாவிகள் இவர் முகத்தைப் பார்த்தவுடனே ஒரு வித பயத்தால் திடுக்கிட்டு, இவர் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.

அந்த பிரபு வியாதியுற்ற போது ஜானை மன்றாடினதின் பேரில் இவர் அவனிடஞ் சென்று அவன் வியாதியைப் குணமாக்கினார்.

வேறு சில துஷ்டர் அர்ச்சியசிஷ்டவரை அடிக்கும்படி கையை ஓங்கியபோது அவர்கள் கை மரத்துப்போனதினால் அவர்களும் இவர் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.

இறந்துபோன ஒரு சிறு பெண்ணுக்கு இவர் உயிர் கொடுத்தார். இவ்வாறே இவர் அநேக புண்ணியங்களைச் செய்து ஆத்தும இரட்சண்யத் திற்காக பிரயாசைப்பட்டு இவர் குறித்த நாளில் உயிர் துறந்து பரலோகஞ் சென்றார்.

யோசனை

வேத விஷயமாக முகத்தாட்சண்யமின்றி நடப்பவர்களுக்கு மெய்யான சமாதானமுண்டாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பசிலிடெஸும் துணை, வே.
அர்ச். எஸ்கில், மே.
அர்ச். ஒனுப்பிரியுஸ், வன.
அர்ச். டெர்னன், மே.