அர்ச். பீற்றர் செலஸ்டின். பாப்பாண்டவர், துதியர் (கி.பி. 296)
இவருடைய பெற்றோர் ஏழைகளாயிருந்தாலும் தங்கள் குமாரனை கல்விச்சாலைக்கு அனுப்பினார்கள். புத்திக்கூர்மையான பீற்றர் திறமையுடன் கல்வி கற்று, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார்.
இவர் சிறு வயதிலே மகா பக்தியுள்ளவராய் ஜெபத் தியானம் முதலிய ஞானக் காரியங்களை கடைப்பிடித்து வந்ததினால் பல முறை தேவதாயாருடையவும், சம்மனசுக்க ளுடையவும் தரிசனம் பெற பாக்கியம் பெற்றார்.
இவருக்கு 20 வயது நடக்கும் போது ஒரு மலைக் கெபியில் ஒதுங்கி ஜெப தபங்களில் காலத்தைக் கழித்தார். இவ்விடத்தில் பசாசாலும் சரீர துர் இச்சையாலும் பல சோதனைகளால் பீடிக்கப் பட்டபோது, தேவ உதவியால் அவைகளை ஜெயித்து புண்ணிய வாழ்வில் உயர்ந்தார்.
இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப்பற்றி கேள்விப்பட்ட அநேகர் இவருக்கு சீஷர்களானபடியால் ஒரு மடத்தைக் கட்டி அர்ச். பாப்பாண்டவருடைய உத்தரவின்மேல் ஒரு புது சபையை ஸ்தாபித்தார்.
அக்காலத்திலிருந்த பாப்பு இறந்தபோது பீற்றருடைய அர்ச்சியசிஷ்டதனத்தையும் புதுமைகளையும் பற்றி கேள்விப்பட்ட கர்தினால்மார்கள் அவரைப் பாப்பரசராகத் தேர்ந்தெடுத்தனர்.
பாப்பரசர் பட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாகப் போனதினால், கட்டாயத்தின் பேரில் அதற்குச் சம்மதித்து செலஸ்டின் என்னும் பெயரைத் தரித்துக்கொண்டார்.
நான்கு மாதம் பாப்பரசர் ஸ்தானத்தி லிருந்தபின் கர்தினால்மாருடைய ஆலோசனையைக் கேட்டு, பாப்பாண்டவர் பட்டத்தை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு குடிசையில் வசித்து ஜெபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து மோட்ச முடியைத் தரித்துக்கொண்டார்.
யோசனை
ஏகாந்தத்தை விரும்புகிறவன் மோட்ச ஆனந்தத்தை அனுபவிப்பான்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். புடென்சியானா, க.
அர்ச். டன்ஸ்ட ன், மே.