அர்ச். ஆன்செல்ம். அதிமேற்றிராணியார் (கி.பி.1109)
துரை மகனான ஆன்செல்ம் சிறுவராயிருக்கும்போது தன் பக்தியுள்ள தாயாரால் தர்ம வழியில் வளர்க்கப்பட்டார்.
அவர் 15-ம் வயதில் துறவற அந்தஸ்தில் உட்பட நினைத்தார். ஆனால் உலக நாட்டமுள்ள அவருடைய தந்தையின் கட்டாயத்தினிமித்தம் அன்னிய நாட்டுக்குச் சென்று கல்விப் பயிற்சி பெற்றுவரும்போது உலக நாட்டமுள்ளவராய் தமக்கு முன்பு இருந்த தேவ பயபக்தியை விட்டுவிட்டு, உலக சந்தோஷங்களை அனுபவித்து வந்தார்.
சில காலத்திற்குப்பின் இவர் தமது தவறை அறிந்துகொண்டு அதற்காக மனஸ்தா பப்பட்டு தவக் காரியங்களை நடத்தி, உலகத்தைத் துறந்து சந்நியாச மடத்தில் சேர்ந்தார்.
அர்ச். ஆன்செல்ம் நடத்திய புண்ணியங்களும் தவச் செயல்களும் தேசமெங்கும் பரவியது.
இங்கிலாந்து தேசத்து அரசனான வில்லியம் என்பவன் கோவில் மானியங்களைக் கொள்ளையடித்து மரணப்படுக்கையில் கிடக்கையில் ஆன்செல்மைத் தனக்கு ஆத்தும் குருவாகவும், பிறகு கான்டர்பரி அதிமேற்றி ராணியாராகவும் தெரிந்துகொண்டான்.
ஆன்செல்ம் இந்த மகிமையான பட்டத் திற்குக் கட்டாயத்தின் பேரில் சம்மதித்தார். தேவ துரோகியான அரசன் குண மானபின் கோவில்களுக்கும் குருக்கள், மேற்றிராணிமாருடைய பராமரிப்புக்காக விடப்பட்ட மான்யங்களை மறுபடியும் அபகரித்துக்கொண்டு, தன் பாதகச் செயலைக் கண்டித்த மேற்றிராணியாரை பரதேசத்திற்கு அனுப்பிவிட்ட சில காலத்திற்குள் அவலமாய் மாண்டான்.
புதிதாக வந்த அரசன் கோவிலுக்குரிய மான்யங்களைக் கோவிலுக்கு மறுபடியும் திருப்பிக் கொடுத்த பிறகு, ஆன்செல்ம் தமது மேற்றிராசனத்திற்குத் திரும்பினார்.
இவர் அரசனால் துன்பப்படுத்தப்பட்ட போதிலும் தளராமல் பொறுமையுடன் அவைகளை அனுபவித்து அர்ச்சியசிஷ்ட வராக மரித்தார்.
யோசனை
திருச்சபையின் ஞான அதிகாரிகளை விரோதிக்கிறவன் சர்வேசுரனை விரோதிக்கிறான். கோவில் பொருட்களை அபகரிக்கிறவன் தேவ துரோகி ஆகுகிறான் என்று அறிவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அனஸ்தாசியுஸ், ம.
அர்ச். பேயுனோ , து.
அர்ச். மால்ரூபியுஸ், வே.