ஆண்டவரே, உம்முடைய வாக்கின்படியே
உம்முடைய தாசனை இப்பொழுது
சமாதானத்தோடு போக விடுவீர்.
ஏனெனில் தேவரீர் சகல ஜனங்களுக்கும்
முன்பாக ஏற்படுத்தின உம்முடைய இரட்சிப்பை
என்னுடைய கண்கள் கண்டு கொண்டன.
(அது) புறஜாதிகளைப் பிரகாசிப்பிக்கிற ஒளியாகவும்
உமது ஜனமாகிய இஸ்ராயேலருக்கு
மகிமையாகவும் இருக்கிறது.
பிதாவுக்கும் சுதனுக்கும் ....
(பின்வரும் ஜெபத்தை முழந்தாளிட்டு சொல்லவும்)
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ, உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவருமாய், மோட்சமுடையவருமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்:என் அபயசத்தம் உமது சந்நதிமட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
இரக்கமுள்ள சர்வேசுரா, எங்கள் பலவீனத்தில் எங்களைப் பாதுகாத்தருளும். சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவின் நினைவைக் கொண்டாடுகிற நாங்கள் அவர்களது இரக்கமுள்ள மன்றாட்டின் உதவியால் எங்கள் பாவங்களிலிருந்து எழுந்திருப்போமாக. இந்த மன்றாட்டுக்களை எல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சதாகாலமும் ஜீவியரும், இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற எங்கள் ஆண்டவரும் உம் திருச்சுதனுமாகியஅதே சேசுகிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபயசத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
ஆசீர்வாதம்: எல்லாம் வல்ல சர்வேசுரன், பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் ஆசீர் நம்மீது இறங்கி, நம்மோடு என்றென்றைக்கும் தங்குவதாக.
பதில்: ஆமென்.