ஆதியிலும் யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப் பட்டேன். எக்காலத்துக்கும் இராமலுமிரேன். பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமூகத்தில் என் தொழிலைச் செய்தேன்.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றி உண்டாவதாக.
முதல்: குழந்தை பெற்ற பின்னும் நீர் மாசற்ற கன்னிகையாகவே விளங்குகின்றீர்.
பதில்: குழந்தை பெற்ற பின்னும் நீர் மாசற்ற கன்னிகையாகவே விளங்குகின்றீர்.
முதல்: சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவீராக.
பதில்: பழுதற்ற கன்னிகை நீரே!
முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும்....
பதில்: குழந்தை பெற்ற பின்னும் நீர் மாசற்ற கன்னிகையாகவே விளங்குகின்றீர்.
முதல்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே.
பதில்: உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, உமது வரப்பிரசாதத்தை எங்கள் இருதயங்களில் பொழிந்தருளும். அதனால், சம்மனசு சொன்னதினால் உமக்குக் குமாரனாகிய சேசு கிறீஸ்து மனிதனானதை அறிந்திருக்கிற நாங்கள் அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம். இந்த மன்றாட்டுக்களை யயல்லாம் தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிற எங்கள் ஆண்டவரும், உம் திருச்சுதனுமாகிய சேசு கிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.
பதில்: ஆமென்.
முதல்: ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றி உண்டாவதாக.
முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே.
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.