மகிமைப்படுத்தப் பட்ட பிரசைகளிடத்தில் வேரூன்றினேன். அவர்கள் சுதந்திரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்: சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார். அவளை ஆதியிலேயே முன்குறித்திருந்தார்.
பதில்: மேலும் அவர் அவளைத் தமது பரிசுத்த கூடாரத்தில் வாசம் பண்ணச் செய்தார்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்.
ஓ ஆண்டவரே, சமாதானமாகிய வெகுமதியைத் தந்து உமது ஊழியர்களைக் காத்தருளும். அவர்கள் எப்பொழுதும் கன்னியாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயின் பாதுகாவலில் நம்பிக்கை வைத்திருப்பதால், சகல சத்துருக்களிடமிருந்தும் அவர்களைப் பாதுகாத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிற எங்கள் ஆண்டவரும் உம் திருச்சுதனுமாகிய சேசுகிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.
பதில்: ஆமென்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதிமட்டும் வரக் கடவது.
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக!
முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.