முந்திரிகைச் செடி போல வாசனையின் சுகந்தத்தை வீசச் செய்தேன். என்னுடைய புஷ்பங்களோ பெருமையினுடையவும், யோக்கியதையுடையவும் கனிகள்.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றி.
கீதம்
ஓ மகிமையான ஆண்டவளே,
நட்சத்திர மண்டலங்களுக்கும் மேலாக சோதிப் பிரகாசத்தில் உன்னதமாக முடிசூட்டப் பட்டவளே,
உமது கரங்களில்தாமே உமது மகா சிருஷ்டிகர் தவழ்ந்தார்.
உமது பரிசுத்த மார்பில் பால் அருந்தினார்.
உமது திருவுதரத்தின் நேசத்திற்குரிய மலரைக் கொண்டு ஏவையின் துயரமான வினையை மாற்றுகிறீர்.
உம் வழியாகவே மனஸ்தாபப்படுகிற ஆத்து‡ மங்களுக்கு அவர்களது மோட்ச இல்லத்திற்கான வழி தரப்படுகிறது.
நீரே முத்துக்களாலும், ஜீவிய ஒளி துலங்கும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டுப் பிரகாசிக்கிற பரலோக அரசரின் வாசலாக இருக்கிறீர்.
ஆதலால் மீட்டுக் கொள்ளப்பட்ட மக்களே, நீங்கள் வந்து உங்கள் அன்னையால் கொண்டு வரப்பட்ட தெய்வீக ஜீவியமானவருக்குப் புகழ் பாடுங்கள்.
ஓ, சகல வரப்பிரசாதங்களுக்கும் மாதாவாகிய மரியாயே, எம் இனத்தாருக்கு இரக்கத்தின் மாதாவே,
பசாசின் வல்லமையிலிருந்து இப்போது எங்களைப் பாதுகாத்தருளும்.
எங்கள் மரண வேளையின் அந்திம நேரத்தில் எங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்.
ஓ ஆண்டவரே, எல்லா மகிமையும் உமக்கே உண்டாவதாக.
பரிசுத்த கன்னிகையின் திருச்சுதனானவர் அனைவராலும் ஆராதிக்கப் படுவாராக.
அவர் பிதாவோடும், தேற்றுகிறவரோடும் ஒரே புகழ்ச்சியும், ஸ்துதியும் என்றென்றும் பெறுவாராக.
முதல்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார். அவர் அவளை முன்குறித்திருந்தார்.
பதில்: தமது பரிசுத்த கூடாரத்தில் அவர் அவளை வாசம் பண்ணச் செய்தார்.