நான் அரிய நேசத்தினுடையவும், பயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த தேவ நம்பிக்கையினுடையவும் மாதாவாயிருக்கிறேன்.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல்: கன்னியர்களின் பரிசுத்த கன்னிகையே, அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதில்: கன்னியர்களின் பரிசுத்த கன்னிகையே, அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: கன்னியர்களின் பரிசுத்த கன்னிகையே, அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமையுண்டாகக் கடவது.
பதில்: கன்னியர்களின் பரிசுத்த கன்னிகையே, அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கீதம்
சகலரிலும் மேலான கன்னிகையே,
உத்தம கனிவுள்ள குணவதியே,
சாந்தமுள்ளவளே, பாவ மாசற்றவளே,
பாவத்திலிருந்து எம்மை விடுவித்துக் காத்தருளும்.
எங்கள் வாழ்வைக் பாவக்கறையின்றிக் காத்தருளும்.
சேசுவில் நித்தியப் பேரின்பங்களை நாங்கள் கண்டடையும் வரை எங்கள் பாதையைப் பாதுகாத்தருளும்.
பிதாவாகிய சர்வேசுரனுக்குப் புகழ்ச்சியும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும்
ஒரே மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
முதல்: குழந்தை பெற்ற பின்னும் தேவரீர் மாசற்ற கன்னிகையாகவே விளங்குகின்றீர்.
பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.