ஏப்ரல் 28

அர்ச். திதிமுஸும் தெயதோரம்மாளும். வேதசாட்சி (கி.பி.304)

கிறீஸ்தவளாயிருந்ததினால் தெயதோரா பிடிபட்டு அதிகாரிக்குமுன் கொண்டுவந்து விடப்பட்டபோது, அவன் அவளுக்கு நயபயத்தைக் காட்டி வேதத்தை மறுதலிக்கும்படி கட்டளையிட்டும், அவள் அதற்கு சம்மதிக்க வில்லை.

அதிபதி அவளுடைய சிறந்த கோத்திரத்தையும், அவளுக்கிருந்த அழகையும் அவளுக்குத் தெரியப்படுத்தி கிறிஸ்தவ வேதத்தை விடும்படி சொல்லியும், அவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கண்டு அவளைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.

சிறையில் துஷ்டரால் தன்னுடைய கற்புக்குப் பழுது உண்டாகாதபடி கர்த்தரை இவள் உருக்கத்துடன் மன்றாடும் சமயத்தில், ஒரு சேவகன் சிறையில் பிரவேசிப்பதைக் கண்டு கலங்கினாள்.

அப்போது சேவகனுடைய உடையை அணிந்து வந்த திதிமுஸ் அவளைத் தைரியப்படுத்தி தன் உடுப்பை அணிந்து கொண்டு தப்பித்துக்கொள்ளும்படி சொல்ல, அவளும் அவ்வாறே வெளியே சென்றாள்.

சிறையில் நடந்த சம்பவத் தைப்பற்றி அதிபதி கேள்விப்பட்டு திதிமுஸின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.

திதிஸ் கொலைக்களத்திற்கு நடத்தப்பட்டு சிரச்சேதம் செய்யப்படும் தருவாயில், தெயதோரா அங்கு சென்று நான் தான் சிறையினின்று என் கற்புக்கு பழுதுண்டாகாதபடி ஓடிப்போனவள்.

என்னைச் சிறையினின்று தப்புவித்த இந்தப் புண்ணியவானுடன் வேதசாட்சி முடி பெற ஆசையாயிருக் கிறேனென்று கூறி, அன்றே அவளும் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றாள்.

யோசனை

நமது கற்புக்குப் பழுதுண்டாகக்கூடிய மனிதர், இடம் முதலியவற்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் விட்டு விரைந்தோடுவாமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். வித்தாலிஸ், வே.
அர்ச். பொல்லியோவும் துணை., வே.
அர்ச். க்ரோனன், ம.
அர்ச். பத்திரிசியுஸ், வே.
அர்ச். சிலுவை பவுல், து