காட்சி 3 - கி.பி. 48 - எபேசுஸ் ஆசிய மைனர் (துருக்கி).



பரிசுத்த தேவமாதாவின் மூன்றாம் காட்சி

கி.பி. 48 - எபேசுஸ், ஆசிய மைனர் (துருக்கி)

காட்சி கண்டவர்கள்: அப்போஸ்தலர்கள்

திருச்சபையின் சில பாரம்பரிய செய்திகளின்படி, பரிசுத்த கன்னி மாமரி பரலோகத்திற்கு ஆரோபணமான மூன்று நாட்களுக்குப் பிறகு அப்போஸ்தலர்களுக்கு தோன்றினார்கள். விண்ணகத்திலிருந்து ஆண்டவரின் உதவிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இறைஞ்சி மன்றாடியபோது, கதிரவனை விட பிரகாசமான ஒளியால் சூழப்பட்டு பரிசுத்த கன்னி மாமரி அவர்களுக்குத் தோன்றி, ”சதா காலமும் உங்களோடு நான் இருப்பேன்” என்று கூறினார்கள்.