அவிசுவாசியின் மனித இருதயத்திற்கும், அவனது நேசத்திற்குரியவர்களாக இருந்து மரித்தவர்களுக்கும் இடையே கல்லறையின் இருள் மட்டுமே இருக்கிறது; ஆகவே தங்கள் நண்பர்களுடையவும், உறவினர்களுடையவும் துன்புறும் ஆத்துமங்களுக்குத் தங்கள் ஜெபங்களின் பலனை அளிக்க அவர்கள் மறுக்கிறார்கள்.
"பாவங்களில் இருந்து இரட்சிக்கப்படும்படி மரித்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுவது பரிசுத்தமும் பிரயோசனமுமுள்ள எண்ணமாயிருக்கிறது" (2 மக்க. 12:46) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ஆகவே விசுவாசமுள்ள மனிதன் இறந்து போன தன் அன்புக்குரியவர்களுக்கும், நண்பர்களுக்கும் தன்னால் உதவி செய்ய முடியும் என்ற தேற்றரவையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கிறான்.
சிலர் இறந்தவர்களுக்காக தங்கள் அன்றாட ஜெபங்களில் வேண்டிக் கொள்கிறார்கள். விசேஷமாக ஜெபமாலை ஜெபித்தும், பூசை கண்டும், முடிந்தால் திவ்ய சற்பிரசாதத்திற்கு முன்பாக திருமணி ஆராதனை செய்தும் அவற்றை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக ஒப்புக் கொடுக்கிறார்கள். அல்லது ஜெபிக்க அதிக நேரம் ஒதுக்க முடியாதபடி, அதிக வேலைப்பளு உள்ளவர்கள் வெறு மனே அவர்களை நினைக்கிறார்கள், ஒரு சில ஜெபங்களை ஜெபிக்கிறார்கள், அவர்களுக்காக கோயிலிலோ, அல்லது தங்கள் வீட்டிலோ ஒரு மெழுகுதிரியை ஏற்றுகிறார்கள்.
கிறீஸ்துநாதரின் தாய்மையுள்ள அக்கறையும், சிநேக மும் நம்முடைய இவ்வுலகத் திருயாத்திரையின் வரம்பு களைக் கடந்ததாக இருக்கிறது, மரணத்தில் நம் கண்கள் மூடப்பட்ட பிறகும் கூட அது நம்மைப் பின் தொடர்கிறது. கத்தோலிக்கர்களாகிய நாம் அவரால் ஏற்படுத்தப்பட்ட ஏக, சத்திய திருச்சபைக்குச் சொந்தமாயிருக்கிறோம். ஆகவே, கத்தோலிக்கர்கள் என்ற முறையில், நம் ஆத்துமத்தின் கண்களுக்கு முன்பாக, நித்தியம், நித்தியம் என்ற பெரிதாக்கப்பட்ட, அலங்காரமுள்ள எழுத்துக்களை நாம் அடிக்கடி காண்கிறோம்.
நாம் நம் ஜீவியங்களைக் கொண்டு, மோட்சம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஏனென்றால், மீறுதலாலோ, சாந்தப்படுத்தப்படாத நீதியினாலோ "அந்தர்களாக இருப்பவர்கள் மோட்ச இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள மாட்டார்கள்'' (1 கொரி. 6:9) என்பதால்தான். தங்கள் மரண நேரத்தில், முழுவதும் பரிசுத்தமாய் இராதவர் களுக்காக, கடவுளின் வாக்குக் கெட்டாத இரக்கமானது, சேசுக்கிறிஸ்துநாதரின் பேறுபலன்களை முன்னிட்டு, மறு உலகத்தில், சுத்திகரிப்பின் ஸ்தலம் ஒன்றைச் சிருஷ்டித்தது. இந்த ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று அழைக்கப் படுகிறது. இங்கே செலவிடப்படும் காலம் உத்தரிப்பின் காலம் எனப்படுகிறது.
''உபசாரமும், ஒளியும், சமாதானமும் உள்ள ஸ்தல மாகிய மோட்சத்திற்கும், நித்திய வாதையின் வாசஸ்தல மாகிய நரகத்திற்கும் இடையில், உத்தரிக்கிற ஸ்தலம் என்று அழைக்கப்படுகிற ஒரு மத்திய நிலை இருக்கிறது. இது பொதுத் தீர்வை நாள் வரை நீடித்திருக்கும். இது இந்த ஜீவியத்தை விட்டுப் புறப்படும்போது, தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருந்தாலும், இறுதி சுத்திகரிப்பு தேவைப்படும் நிலையில் இன்னும் இருக்கிற ஆத்துமங் களுக்காக உண்டாக்கப்பட்டது.
தண்டனை, சுத்திகரம், நீதி மற்றும் இரக்கம் ஆகியவற்றிற்கான இந்த ஸ்தலத்தில், தங்கள் அற்பப் பாவங்களைப் பரிகரிக்க வேண்டியவர்கள், அல்லது தங்கள் அநித்திய தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள், அல்லது இவை இரண்டையுமே செய்ய வேண்டியவர்களாகிய ஆத்துமங்கள் தங்கியிருக்கிறார்கள். உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்கத் திருச் சபையின் போதகம் பின்வரும் இரண்டு வாக்கியங்களில் எடுத்துரைக்கப்படுகிறது:
1) மறு உலகில் இப்படிப்பட்ட அற்பப் பாவங் களைப் பரிகரிப்பதற்கும், பாவத்திற்குரிய அநித்திய தண்டனைகளை அனுபவிப்பதற்கும் உரிய ஒரு தற்காலிக இடம் இருக்கிறது. மரிப்பதற்கு முன் தன் பாவங்களுக்குரிய அநித்திய தண்டனையை முழுவதும் அனுபவிக்காத வர்கள், அதை அனுபவித்துத் தீர்க்கும் இடமாகவும் அது இருக்கிறது.
2) விசுவாசிகள் தங்கள் ஜெபங்கள் மற்றும் நற்செயல்கள் மூலமாகவும், விசேஷமாக திவ்விய பலி பூசையின் மூலமாகவும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் துன்புறும் ஆத்துமங்களுக்கு உதவி செய்ய முடியும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
உத்தரிக்கிறஸ்தலம் - நீதியின் பரம இரகசியம்
Posted by
Christopher