சேசுநாதருடைய போதனை!

திவ்ய வார்த்தையான தேவசுதன், பூவுலக மனிதர் ஒவ்வொருவரையும் கூவியழைத்து, "என்னைப் பின்செல்'' எனக் கட்டளையிடுகிறார். அவ்விதமே நாம் அவரைப் பின்பற்றுவோமானால், இயற்கை வனப்பு மிகுந்த குறுநிலங்கள் மத்தியில் நம்மை இட்டுக்கொண்டு போய், இந்த இனிய ஆசிரியர் தம் திருவாய் மலர்ந்து கூறும் மதுர போதனைகள் இவையே:

பரமண்டலங்களையும், பல உலக சராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்தி வரும் தெய்வீக அரூபியானவர், அங்கு இங்கு என்று கணிக்க இயலாமல், எங்கும் விரிந்து, பரந்து, நிறைந்திருக்கும் பரம் பொருள், தெய்வம், உங்கள் ஆண்டவர் மாத்திரமல்ல, உங்களைப் பெற்ற தகப்பனிலும் உற்ற தகப்பன் ஆவார். ஆதலால் அவரை அழைக்கும் பொழுது அப்பா பிதாவே என்று அழையுங்கள்.

உங்களுக்கு முற்பிறப்பு, பூர்வ ஜென்மம் என்பது ஒன்றில்லை. ஆயினும் இவ்வுலகில் பிறந்த பின்பு, நீங்கள் ஞானவிதமாய்ப் புதுப்பிறப்பு அடைய வேண்டும். அதாவது, உங்கள் பரம பிதாவின் வரப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் மோட்சம் அடைய இயலாது. ஆண்டவர் முன்னிலையில் ஆண்கள், பெண்கள் அரசன் அடிமை என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் சமமான விதமாய் சர்வேசுரனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.

இவ்விதம் ஞான விதமாய்த் தேவ புத்திரர்கள் ஆன நீங்கள் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களைப்போல, தேவன் உங்களுக்கு அளித்திருக்கும் நற்கொடைகளை மேன் மேலும் அதிகரிக்கச் செய்து, அவரது ஊழியத்தில் நிலைத்திருங்கள்.

நன்மையில் நிலைக்காமல், பலவீனத்தால் தவறி, ஊதாரிகளாய் உங்கள் ஞானக் கொடைகளை வீணாக்கித் தத்தளிக்கும் காலத்தில் திரும்பவும் உங்கள் தகப்பனிடம் செல்ல முயற்சி எடுங்கள். ஏனெனில் எப்போது நீங்கள் மனந் திரும்புவீர்கள் என எதிர்பார்த்திருக்கும் அந்த இரக்கமுள்ள தந்தை உங்களைத் திரும்ப ஏற்றுக்கொள்வார்.

அந்த நல்ல பிதாவின் சமாதான அமரிக்கையில் நீங்கள் மரிப்பீர்கள் என்றால், மோட்சம் அடைவீர்கள். அவ்விடத் தில் துன்பம், துயரம், மண வாழ்க்கை, மரண முடிவு என்பவை இல்லை. எல்லோரும் சரீரம் இல்லாத சம்மனசுக் களப் போலவும் தேவ தரிசன பேரின்பத்தில் ஆழ்ந்த நித்திய ஆனந்தம் அடைவார்கள்.

இவ்வுலகில் சர்வேசுரன் உங்கள் நன்மைக்காகவே நீங்கள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். ஆகையால் நீங்கள் பொறுமை சாந்தமுள்ளவர்களாய், அடக்கமும் தாழ்ச்சியும் உள்ளவர்களாய், எவருக்கும் தீங்கு நினைக்காதவர்களாய், உள்ளத்தில் முதலாய் இச்சை கொள்ளாத உயர்ந்த பரிசுத்தர்களாய், நன்மை செய்யும்போதும், பிறர் மதிப்பை எதிர்பாராதவர்களாய், தேவனுக்காகச் சகலமும் செய்வீர் களானால், உங்கள் இருதயங்களை அறியும் அவர் உங்களுக்கு சம்பாவனை அளிப்பார்.

ஒருவர் ஒருவரை நேசியுங்கள். உங்கள் உறவினர்களை மாத்திரம் அல்ல, அயலாரையும் நேசியுங்கள். உங்களுக்கு நன்மை செய்தவர்களை மாத்திரமல்ல, தின்மை செய்த எதிராளிகளையும் நேசியுங்கள். நீங்கள் மற்றவர்ளை மன்னிப்பது போல், உங்கள் பரம பிதா உங்களையும் மன்னிப்பார்.

"மனத்தரித்திரர் பாக்கியவான்கள்: ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது. 

சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

அழுகிறவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள். 

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் சர்வேசுரனைத் தரிசிப்பார்கள். 

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் என்னப்படுவார்கள்.

நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கிய வான்கள்: ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர் களுடையது. 

என்னைப்பற்றி மனிதர் உங்களைச் சபித்துத் துன்பப் படுத்தி, உங்கள் மேல் சகல தின்மையையும் அபாண்ட மாய்ச் சொல்லும்போது, நீங்கள் பாக்கியவான்கள்.

அப்போது அகமகிழ்ந்து அக்களியுங்கள்; ஏனெனில் பரலோகத்தில் உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது. இவ்வண்ணமே உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளை யும் உபத்திரவப்படுத்தினார்கள்'' (மத்.5:3-12).

"வேதப் பிரமாணத்தையாகிலும், தீர்க்கதரிசனங்களை யாகிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்'' (மத்.5:17).

மனுமக்களின் மனத்தைக் கொள்ளைகொள்ள வல்லவரான இந்த மகத்துவமுள்ள ஆசிரியர் போதனை களை மாண்பு மிகுந்த சுவிசேஷங்களில் காணலாம். இப்போதனைகள் உலகத்தில் மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதும், உலக சரித்திரத்தைத் திருத்தி அமைத்ததும் உண்மையல்லவா?


அற்புத மாற்றங்கள்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் காட்டுமிராண்டிகளையும், நரமாமிச பட்சணிகளையும் சீர்திருத்தி, மற்ற மனிதர்களைப் போலவும், மனிதர்களாய், மான அபிமானமுள்ளவர்களாய் வாழ்விக்கச் செய்தது கிரேக்க, உரோமையரின் படை வலிமையல்ல; பாரசீக, எகிப்தியரின் திறமையல்ல, சித்தர்களன் ஞானமும் அல்ல, புத்தர்களின் பரோபரோகம் அல்ல. ஆனால் இந்தத் திவ்விய ஆசிரியராம் சேசுநாதரைப் பின்பற்றிய சீடர்கள், அன்பு என்னும் ஒரே ஆயுதம் கொண்டு விலங்குகளுக்கு ஒப்பான அந்தத் தீயவர்களை வென்றனர். தம்மைப் போன்ற மனிதர்களைக் கொன்று உண்ணும் தாழ்ந்த நிலையில் இருந்த அவர்களைச் சகல மனிதர்களுக்கும் சமமாக்கினர்.

ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் இருந்த அடிமைகள் என்ன, அவ்வப்போது தோன்றி, அந்நிய நாட்டுப் பட்டணங்களையும், கிராமங்களையும் வாளையும் நெருப்பையும் கொண்டு அழித்து நிர்மூலமாக்கிய அற்பத் தனமுள்ள கொள்ளைக்கூட்டங்கள் என்ன, இவர்கள் இன்று இல்லாமல் ஒழிந்து, எங்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்கள் எழும்புவதற்குக் காரணம், கடவுள் இல்லை, வேதம் இல்லை என்று கதறும் நாத்திகர்கள் அல்ல; மனிதப் புலன்களுக்கு எட்டியதுதான் உண்மை, மற்றதெல்லாம் பொய் என்று மடமை பேசும் அரை வேக்காட்டு விஞ்ஞானிகளும் அல்ல; ""நீங்கள் போய் சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து; பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும் படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ, நான் உலக முடிவு பரியந்தம் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்'' (மத்.28:19) என்று திருவுளம்பற்றிய அந்தத் தெய்வீக ஆசிரியரது திருக்கட்டளையைச் சிரமேற்கொண்டு, சென்று போதித்த சீடர்கள் மாத்திரமே.

என் சகோதரனே, அன்பு வடிவான இந்த ஆசிரியரின் அரிய போதனையால் உலகம் மாறியது; அறிவு வளர்ந்தது; அன்பு பெருகியது. ஆனால் அவர் காலம் முதல் நம் காலம் வரை அந்தத் திருப்போதனையை எதிர்த்தவர்கள் அநேகர்; பகைத்தவர்கள் பலர். இக்காரணம் ஒன்றாலேயே இப்பூவுலகம் இன்னும் இழிநிலையில் இருக்கிறது. இந்த இழிநிலை மாற வேண்டுமானால் தனி உடமையை அபகரித்துப் பொது உடமையாக்கினால் ஆகாது; சர்வேசுரன் மட்டில் உள்ள நம்பிக்கையை அழித்து ஒரு சில மனிதரை நம்பினால் சமத்துவம் வந்து விடாது. அதற்கு விரோதமாய், மக்கள் அனைவரும் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பது இல்லாது, ஒரு கொடிய அரசியல் கட்சியினருக்கோ, ஓர் அரசாங்கத்தினருக்கோ அடிமைப் பட்டு, காடுகளில் சுயேச்சையாய் வாழும் மிருகங்களை விடக் கேவலமான நிலையை அடைய வேண்டி வருமே. ஆதலால் ஆசிரிய சிரேஷ்டரான அன்பர் சேசுநாதருடைய அருட்போதனையைக் கேட்டு, அதற்குச் செவிசாய்ப் பாயாக.