ஆரம்ப வாக்கியம்:
ஓ ஆசீர்வதிக்கப் பட்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, நித்திய கன்னிகையே, ஆண்டவருடைய தேவாலயமே, இஸ்பிரீத்து சாந்துவின் பரிசுத்த வாசஸ்தலமே, நீர் மட்டுமே இணையற்ற விதமாக எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்து நாதருக்கு மகிழ்வளிக்கிறீர். மக்களுக்காக வேண்டிக் கொள்ளும், குருக்களுக்காக மன்றாடும், பக்தியுள்ள பெண்களுக்காகப் பரிந்து பேசுவீராக. அல்லேலூயா, அல்லேலூயா.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: எனது அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியர்களாகிய நாங்கள் எப்போதும் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் நலமுள்ளவர்களாக இருக்க உம்மை இறைஞ்சி வேண்டுகின்றோம். எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய மகிமையுள்ள மன்றாட்டால் நாங்கள் இப்போதைய துயரத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, வரவிருக்கும் நித்தியப் பேரின்பத்தை அனுபவிக்கத் தயைகூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக.
பதில்: ஆமென்.