பாவ நடனம்!

வேதத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஒரே ஆள் ஏரோது ராஜா தான்!

அவன் பிறந்த நாள் அன்று வரும் அனைவருக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் சந்தோஷப்படுத்த ஏரோதியாளின் மகள் நடனமாடினால் .அந்தவேளை குடிவெறியில் இருந்த ஏரோது அந்த பெண்ணிடம் நீ எதைக் கேட்டாலும் உனக்கு தருவேன் என்று வாக்கு கொடுத்துவிட்டான் .

அன்று அந்த பெண்ணின் பாவ நடனம் திருமுழுக்கு யோவானின் தலையை வாங்கிவிட்டது.தாயின் வயிற்றில் இருக்கும் போதே  அன்னை மரியாயின் வாழ்த்தை கேட்டு அபிஷேகித்தினால் துள்ளினவரின் தலை துண்டாகிவிட்டது மனிதர்களின் பாவ நடனத்தை குறித்து கிறிஸ்துவ விசுவாசிகள் விழிப்பாய் இருங்கள். ஆம் அந்த பாவ நடனங்களுக்கு பின்னால் இச்சை, கொலை வெறி ஆவிகள் உள்ளன.

இன்று பல கிறிஸ்தவர்கள் புது வருடம் ,கிறிஸ்மஸ் ,ஊர் திருவிழாகள் வரும்போது நன்றாக குடித்துவிட்டு சினிமா பாட்டுக்கு ஆபாச நடனம் ஆடி பாவ வலையில் விழுந்துவிடுகிறார்கள். அது அந்த வருஷத்தையே சாபமாக மாற்றி விடுகிறது. கடவுளுக்கு எதிராக செய்யும் இந்த பாவம் நியாய தீர்ப்பை கொண்டு வந்துவிடும் ஜாக்கிரதை.

சில கிறிஸ்தவ பள்ளிகளில் கூட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த பாவ நடனத்துக்கு முக்கியம் கொடுக்கிறார்கள் .சும்மா கடமைக்காக முதலில் கடவுள் வாழ்த்து  என்று சொல்லி ஒரு பாடலை பாடி விட்டு சினிமா பாட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . சிறு பிள்ளைகளை அவர்களின் வாழ்வின் தொடக்கத்தை  கடவுளை மகிமை படுத்துவதை  விட்டு கூத்தாடிகளை மகிமை படுத்துகிறார்கள்.இவர்கள்  மோட்சம்   அடையவே முடியாது  .

கிறிஸ்தவ  விசுவாசிகளான நாம் ஒருநாளும் நம் பிள்ளைகளை இந்த காரியங்களுக்கு அனுமதிக்க கூடாது .நாம் கடவுளை பாடி,துதிக்க நமக்கு இந்த வாழ்வு கொடுக்க பட்டுள்ளது அதை  சாத்தானுக்கு  கொடுக்க வேண்டாம் .

இயேசுவை பாடி,துதித்து ,குடும்ப ஜெபமாலை  செய்து,அவரை மகிமைப் படுத்துங்கள். அப்போது தேவ கிருபை, தேவ காருண்யம், தேவ இரக்கம், தேவதயவு, சமாதானம், சந்தோசம், ஆரோக்கியம், புதுபலன், மன்னிப்பு , இரச்சிப்பு , ஆசிர்வாதம், நித்ய வாழ்வு இவை எல்லாம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் இயேசு தருவார்.

ஆமென்.

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள், அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
சங்கீதம்: 150:1

4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள், யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம்: 150:4