மனிதா, மரணம், தீர்வை, பரலோகம், நரகம் ஆகிய உன் நான்கு இறுதிக்கதிகளையும் எப்போதும் நினைவில் கொண்டிரு. நீ ஒருபோதும் பாவஞ் செய்ய மாட்டாய்.
ஓ கிறீஸ்தவ ஆத்துமமே, நீ ஒருநாள் இறந்து போவாய். ஆனால் அது எப்படி, எப்பொழுது, எங்கே நடக்கும் என்பது உனக்குத் தெரியாது.
இறுதித் தீர்வையின் போதுதான் நித்தியத்திற்கும் நீ மகிழ்ச்சியாயிருக்கப் போகிறாயா, அல்லது வேதனைப்படப் போகிறாயா என்பது உனக்குத் தெரிய வரும்.
சர்வேசுரனை உன் பாவத்தால் நீ நிந்திப்பாயானால், நரக நெருப்பில் நீ நித்தியத்திற்கும் வெந்து கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு மாறாக, பரிசுத்த சுவிசேத்தின் போதனைகளையும், அறிவுரைகளையும் நீ பின்பற்றுவாயயன்றால் பரலோகப் பேரின்பம் உன்னுடையது.