ஆரம்ப வாக்கியம்:
மகிமை பொருந்திய தேவ மாதாவே! எப்பொழுதும் கன்னிகையான பரிசுத்த மரியாயே! அனைவருக்கும் ஆண்டவராக இருப்பவரைத் தாங்கும் தகுதியை உடையவளாக நீர் மட்டுமே காணப்பட்டீர். ஒரு கன்னிகையாக இருந்தும் சம்மனசுக்களின் அரசருக்கு அமுதூட்டினீர். உம்மை நோக்கி மன்றாடும் எங்களைத் தயவோடு நினைத்தருளும். உமது தயாளமுள்ள பராமரிப்பால் நாங்கள் தற்காக்கப் பட்டு, மோட்ச இராச்சியத்துக்கு வந்து சேரத் தகுதியுள்ளவர்களாகும் படிக்கு எங்களுக்காகக் கிறீஸ்து நாதரிடம் மன்றாடுவீராக.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபயசத்தம் உமது சந்நிதிமட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியர்களாகிய நாங்கள் எப்போதும் எங்கள் சரீரத்திலும் மனத்திலும் நலமுள்ளவர்களாக இருக்க உம்மை மன்றாடுகின்றோம். எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய மகிமையுள்ள மன்றாட்டால் நாங்கள் இப்போதைய துயரத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, வரவிருக்கும் நித்தியப் பேரின்பத்தை அனுபவிக்கத் தயைகூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக.
பதில்: ஆமென்.